மகம்- வேள்வி;உய்க்கும் - சேர்க்கும்; நராதிபர் - அரசர்; விராய் - கலந்து; எணும் - எண்ணும்; பவம் - பிறப்பு; இயம்பும் காலை - சொல்லும் போது; வேர் அறுக்கும் - வேருடன் அழிக்கும். |
| 31. | மற்று ஒரு தவமும் வேண்டா; மணி மதில் இலங்கை மூதூர் செற்றவன் விசயப் பாடல் தெளிந்து. அதில் ஒன்றுதன்னைக் கற்றவர். கேட்போர். நெஞ்சில் கருதுவோர். இவர்கள் பார்மேல் உற்று அரசு ஆள்வர்; பின்னும் உம்பராய் வீட்டில் சேர்வார். |
மணி மதில் -அழகிய மதில்; மூதூர் - பழமையான ஊர்; விசயம் - வெற்றி; செற்றவன் - வென்றவன்; உம்பராய் - தேவராய்; வீட்டில் - பேரின்ப வீட்டில். |
| 32. | வென்றி சேர் இலங்கையானை வென்ற மால் வீரம் ஓத நின்ற ராமாயணத்தில் நிகழ்ந்திடு கதைகள் தம்மில் ஒன்றினைப் படித்தோர் தாமும். உரைத்திடக் கேட்டோர் தாமும். ‘நன்று இது’ என்றோர் தாமும். நரகம்அது எய்திடாரே. |
வென்றி- வெற்றி; இலங்கையான் - இராவணன்; மால் - திருமால்; ஓத - கூற; நின்ற - நிலைபெற்ற; நிகழ்ந்திடு- நடைபெறுகின்ற; நரகம் அது எய்திடார் - நரகத்தை அடைய மாட்டார்கள். |
| 33. | இறு வரம்பில் ‘இராம’ என்றோர். உம்பர் நிறுவர் என்பது நிச்சயம்; ஆதலால். மறு இல் மாக்கதை கேட்பவர் வைகுந்தம் பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ? |
இறுவரம்பு - இறுதிக்காலம் (உயிர் விடும் போது); உம்பர் - சுவர்க்கம்; நிறுவர் - நிலைப்பர்; மறு இல் - குற்றமில்லாத; மாக்கதை - சிறந்த கதை; பெறுவர் - அடைவர்; பேசவும் - சொல்லவும். |