| 34. | அன்னதானம். அகில நல் தானங்கள். கன்னி தானம். கபிலையின் தானமே. சொன்ன தானப் பலன் எனச் சொல்லுவார்- மன் இராம கதை மறவார்க்குஅரோ. |
அன்னம்- சோறு;அகிலம் - எல்லாம்; கபிலை- பசு; சொன்னம் - பொன்; மன் - நிலைபெற்ற; மறவார்க்கு - மறக்காதவர்க்கு. |
| 35. | வட கலை. தென் கலை. வடுகு. கன்னடம். இடம் உள பாடை யாது ஒன்றின்ஆயினும். திடம் உள ரகு குலத்து இராமன்தன் கதை அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே. |
வடகலை- வட மொழி; தென்கலை - தென் மொழி (தமிழ்); வடுகு - தெலுங்கு; பாடைகள் - மொழிகள் (பாஷை) ; திடம் - வல்லமை; ரகுகுலம் - சூரிய குலம்; அடைவுடன் - முறையாக; அமரர் - விண்ணவர். |
| 36. | இத் தலத்தின் இராமாவதாரமே பத்திசெய்து. ‘பரிவுடன் கேட்பரேல். புத்திரர்த் தரும்; புண்ணியமும் தரும்; அத் தலத்தில் அவன் பதம் எய்துமே. |
இத்தலத்தின் - இவ்வுலகத்திலே; இராமாவதாரம் - இராமாயணம்; பத்தி - பக்தி; பரிவுடன் - அன்புடன்; அத்தலம் - மறு உலகம்; அவன்பதம் - பரமபதம்; எய்தும் - அடையும். |
| 37. | ‘ஆதி “அரி ஓம் நம” நராயணர் திருக் கதை அறிந்து. அனுதினம் பரவுவோர். நீதி அனுபோக நெறி நின்று. நெடுநாள் அதின் இறந்து. சகதண்டம் முழுதுக்கு ஆதிபர்களாய் அரசு செய்து. உளம் நினைத்தது கிடைத்து. அருள் பொறுத்து. முடிவில் சோதி வடிவு ஆய். அழிவு இல் முத்தி பெறுவார்’ என உரைத்த. சுருதித் தொகைகளே. |
நராயணர்- நாராயணர்; அனுதினம் - நாள்தோறும்; பரவுவோர் - சொல்லுவோர்; சகதண்டம் - உலகம் முழுவதுக்கும்; ஆதிபர் - அதிபர் (உரியவர்); சோதி வடிவு - ஒளி வடிவம்; சுருதித் தொகை - நூல்களின் தொகை. |