பக்கம் எண் :

  மிகைப் பாடல்கள்851

உழவர்கள்     சேற்றை மிதிக்க அங்கு   மலர்ந்துள்ள  செங்கழுநீர்
மலரின் மணத்தால் தாள்களும் கைகளும் அந்த  மலர்மணமே   கமழும்.
வாளைமீன்கள்   கமுகில்   பாய்வதால்   அந்த   வாளை   மீன்களும்
வயல்களும் கமுகம் பாலை மணம்கமழும்.
  

                                        3 நகரப் படலம்
 

44.எங்கும் பொலியும் பரஞ் சுடர் ஆகி.
   எவ் உயிரும்
மங்கும் பிறவித் துயர் அற.
   மாற்று நேசம்
தங்கும் தருமத்து உரு ஆகி.
   தரணி மீது
பொங்கும் கருணைப் புத்தேள் கருத்து
   யாம் எவன் புகல்வோம்?

 

பொலியும்-  விளங்கும்; பரஞ்சுடர் - மேலான  ஒளி;  தரணி  -
உலகம்; புத்தேள் - இறைவன்; தருமத்து உரு - அறத்தின் வடிவம்.
                                                  74-1
 

45.வேதம்அதனுள் விளை பொருள்
   விகற்பத்துள் அடங்காச்
சோதி மயமாய்த் துலங்கி.
   தொல்உயிர்த் தொகை பலவாய்.
ஓது புவனம் உதரத்துள்
   ஒடுக்கியே. பூக்கும்
ஆதி முதல்வன் அமர் இடம்
   அயோத்தி மா நகரம்.

 

விளைபொருள்- விளைந்த பொருள்; விகற்பம் - வேறுபாடு;தொல்
உயிர்  
-  பழைமையான உயிர்; புவனம் - உலகம்; உதரம் -  வயிறு;
ஆதி   முதல்வன்   
-   ஆதியாகிய   முதல்   பொருள்; அமர்  -
அமர்ந்திருக்கும்.                                      74-2
 

                                      4 அரசியற் படலம்
 

46.விரி கதிர் பரப்பி. மெய்ப் புவனம் மீது இருள்
பருகுறும் பரிதி அம் குலத்தில். பார்த்திவன்
இரகு. மற்று அவன் மகன் அயன் என்பான். அவன்
பெருகு மா தவத்தினில் பிறந்த தோன்றலே.

 

விரிகதிர்  -  விரிந்த  கிரணங்கள்;  பருகுறும்  -   உண்ணுகின்ற;
பார்த்திபன்  
-  அரசன்; பெருகு - பெருகிய;   தோன்றல் -  மகன்
(தயரதன்).