பக்கம் எண் :

852பால காண்டம்  

                                5 திரு அவதாரப் படலம்
 
47.‘பொறை இலா அறிவு. போகப்
   புணர்ப்பு இலா இளமை. மேவத்
துறை இலா வனச வாவி.
   தூசு இலார் போலித் தூய்மை.
நறை இலா மலரும். கல்வி
   நலம் இலாப் புலமை. நன்னீர்ச்
சிறை இலா நகரும். போலும்.
   சேய் இலாச் செல்வம்’ என்றான்.

 

பொறை   - பொறுமை; போகப்புணர்வு - இன்ப நுகர்ச்சி; துறை -
இறங்குதுறை; வனசவாவி - தாமரைத் தடாகம்; நறை - மணம்; சேய் -
குழந்தை.                                             4-1
 

48.கறை மிடற்று அண்ணலும் கடவுளோர்களும்
மறை முதற் கிழவனை வந்து நண்ணலும்
முறைமையின் கடன் முறை முற்றி. முண்டகத்து
இறைவனும். அவரொடும் இனிதின் ஏகினான்.

 

கறை    மிடறு- கறுத்த மிடறு; அண்ணல் - சிவபிரான்; மறை -
வேதம்;  கிழவன்  -  பிரமன்;  முண்டகம் -  தாமரை;  இனிதின் -
மகிழ்வுடன்.                                           5-2
 

49.என்று இனையன பல இயம்பி. ‘எங்கணும்.
கன்றி. அவ் அரக்கரை அழித்துக் காத்தியேல்.
ஒன்றிய உயிர்களும். உலகு யாவையும்
இன்று நீ படைத்தி’ என்று இசைத்து. பின்னரும்.

 

இனையன  -   இத்தகைய;  ஒன்றிய  -  நெருங்கிய; எங்கணும் -
எங்கும்; காத்தியேல் - காப்பாயானால்; இசைத்து - கூறி; பின்னரும் -
மறுபடியும்.                                          5-4
 

50.ஆயவர் அயன் முதல் அமரர். ஈறு இலா
நாயகன் இரு பதம் நயந்து. சிந்தைமீது
ஓய்வு இலாது. அவன் அரு மறைகள் ஓதியே.
நேயமோடு இருந்து. இவை நிகழ்த்தல் மேயினார்.

 

ஆயவர்    - அத்தகையோர்; ஈறு இலா - முடிவில்லாத; பதம்  -
பாதம்;  அருமறை  -  அரிய  மறைகள்;  ஓதி  - கூறி; மேயினார் -
தொடங்கினர்.                                         8-1