பக்கம் எண் :

  மிகைப் பாடல்கள்853

51.‘காத்தி நீ எமை; காக்கிலர் தம்மை யாம்
ஏத்தியே இளைத்தோம்; இறைவா! இடர்ப்
பார்த்தியோ?
- திருப் பாற்கடற் பள்ளியின்
மூர்த்தியே! முதல்வா! முகில் மேனியாய்!

 

காத்தி-  காப்பாயாக; காக்கிலர் - காக்க  இயலாதவர்கள்; இடர் -
துன்பம்; ஏத்தி - துதித்து; முகில் - மேகம்; மேனி - உடல்.      8-2
 

52.‘அந்தகாரத்து அரக்கர் செய் தீமையால்.
நொந்துளோம்! இறைவா! நொடிப் போதினில்
வந்து மாற்றிடும் வண்ணம் எமக்கு அருள்
-
எந்தையே! கருணாகரனே!’ எனா.
 

அந்தகாரம்     - பேரிருட்டு; செய்தீமை - செய்த தீமை (வினைத்
தொகை)  ; நொடிப் போதினில் - ஒரு நொடிப் பொழுதில் (விரைவாக)
எனா - என்று.                                        8-3
 

53.அறி துயில் எழுந்தனன். அமரர் கூப்பிடும்
மறை மொழித் துதி ஒலி வந்து இசைக்கவே;
நிறை குணத்து அமரர்கள் நினைத்து அழைப்பதை.
இறைவனும். திரு உளத்து அறிந்து. அங்கு எய்தவே.

 

அறிதுயில்-யோக நித்திரை; அமரர் - தேவர்கள்; மறை - வேதம்;
இசைக்க
- கேட்க; இறைவன் - திருமால்; எய்த - அடைய.      15-1
 

54.வானவர் அம் முறை வழங்க. மா மதித்
தேன் உறும் இதழி அம் தெரியல் வேணியான்
ஆனவர்தமைக் கரம் அமைத்து. அங்கு. ஐயனைத்
தான் முகம் நோக்கியே சாற்றல் மேயினான்.

 

வானவர்     - தேவர்கள்; இதழி - கொன்றை; தெரியல் - மாலை;
வேணி   
-   சடைமுடி;    சாற்றல்   மேயினான்   -   சொல்லத்
தொடங்கினான்.                                        9-1
 

55.எனக் கலை மா முகச் சிருங்கன் இவ் உரை-
தனைச் சொல. தரணிபர்க்கு அரசன்தான் மகிழ்ந்து.
அனைத்து உலகு உயிரொடும் அறங்கள் உய்ய. தம்
மனத் துயர் அகன்றிட. வணங்கிக் கூறுவான்.

 

கலை மாமுகம்  -  மான்முகம்; தரணிபர்  -  அரசர்;  உய்ய  -
வாழ.                                               78-1