| 56. | மேடம் ஆம் மதி; திதி நவமி; மீன் கழை; நீடு உறு மாலை கற்கடகம்; நீதி சேர் ஓடை மா களிறு அனான் உதய ராசி கோள் நாடின். ஏகாதசர் நால்வர் உச்சரே. |
ஓடை - நெற்றிப் பட்டம்; களிறு அனான் - யானை போன்றவன் (இராமன்); உதயம் - இலக்கினம் (கடகம்); மதி மேடம் - திங்கள் சித்திரை; மீன் - நட்சத்திரம்; கழை - புனர் பூசம்; மால் - புதன்; ஐ - பத்தாமிடம்; கோள் - கிரகங்கள்; நால்வர் - செவ்வாய். குரு. சுக்கிரன். சனி. ஜென்ம இலக்கினத்திலிருந்து பதினொன்று. பதினொன்றுக்குரியவர் நால்வரும் தங்களது உச்ச வீடுகளான நான்கில் இருந்தனர் என்பது கருத்து. 106-1 |
| 57. | என்றனர் சாதகம் ஈசற்கு; ஏனையர் தம் தமக்கும் தகும் முறையில். தாம் தெரிந்து. ஒன்றிய தமனியத்து எழுதி ஓதினார்- வன் திறல் சுரர்குரு வாழ்த்து எடுப்பவே. |
ஈசன் - இறைவனாகிய இராமன்; தகும் முறை - தகுந்த முறையில்; தமனியம் - பொன்; ஓதினார் - படித்தார்கள்; சுரர்குரு - வியாழன். 106-2 |
| 58. | நோக்கினன் களிப்பு எழ; நுணங்கு கேள்வி நூல் ஆக்கிய முனிவனை வணங்கி. ‘ஐய! என் பாக்கியம் பலித்தது. இப் பாலர்’ என்று. பார் காக்குறும் அரசனும். கழறல் மேயினான். |
நோக்கினன் - பார்த்தான்; பாக்கியம் - பேறு; பார்காக்குறும் அரசன் - தயரதன்; கழறல் - கூறல். 107-1 |
| 59. | சுந்தரப் பொடிகளும் செம் பொற் சுண்ணமும் சந்தனம் நீரொடு கலந்து. தையலார் பந்தியில். சிவறியால் சிதற. பார்மிசை இந்திரவில் எனக் கிடந்தது எங்குமே. |
சுந்தரப் பொடி- மணப் பொடி; பொற்சுண்ணம் - பரிமளப் பொடி; தையலார் - பணிப் பெண்கள்; பந்தியில் - வரிசையில்; சிவிறி - விசிறி; இந்திரவில் - வானவில்; பார்மிசை - தரை மேல். 115-1 |
| 60. | அரு மறை நெறி வழி. அரசனும். அன்னப் பிரசனம் மதலையர் பெறு வழி உதவி. |