பக்கம் எண் :

  மிகைப் பாடல்கள்855


 

கரை அறு திரு நகர் விழவொடு களியா.
இருமையும் உதவுறு தானமும் ஈந்தான்.
 

அன்னப்     பிரசனம்   -    முதன்    முதல்     குழந்தைக்கு
உணவூட்டுதலாகும்;  கரை  அறு - அளவற்ற; களியா -  களிப்படைய;
இருமை
- இம்மை. மறுமை.                             120-1
 

                                     6 கையடைப் படலம்
 

61.அப் பெருந் திருவொடும் ‘அகில நாதன்’ என்று.
எப் பெரும் புவனமும் இறைஞ்சி ஏத்தவே.
தப்ப அருந் தருமமும் தயாவும் தாங்கியே.
ஒப்புரவுடன் அவன் உவந்து வாழும் நாள்.

 

பெருந்திரு  -  பெருஞ் செல்வம்; அகில நாதன் - அகிலத்துக்குத்
தலைவன்;  புவனம்  -  உலகம்; தப்ப அரும் - தப்ப அரிய; தயா -
கருணை; ஒப்புரவு - பரோபகாரம்; உவந்து - மகிழ்ந்து.          1-1
 

62.அரி - அணைமிசைதனில். அழகு மன்றினில்.
புரி தவம் மிகு பதப் பொற்பின் நீடு அருள்
அரசர்கள் முடி படி அணைய. அம் பொனின்
உரை பொடி மலை குவை ஒப்ப குப்பையோ.

 

அரியணை    -  சிம்மாசனம்; மன்று - மன்றம் (அரசவை) ; நீடு -
நீண்ட; படி அணைய - நிலத்தில் பட; பொனின் - பொன்னின்; உரை
- உரையும்.                                           1-2
 

63.‘“இனைய சோலை மற்று யாவது?” என்று. மா
முனிவ! கூறு’ என முதல்வன் கூறலும்.
பனுவல் வேத நூல் பகரும் மா தவன்.
‘தனு வலாய்! இதன் தன்மை கேள்’ எனா.

 

இனைய- இத்தகைய; முதல்வன்  - இராமபிரான்; பனுவல்  - நூல்;
பகரும்
- சொல்லும்; தனுவல்லாய் - விற்போரில் வல்லவனே.    24-1
 

64.‘சம்பரப் பெயர்த் தானவ(ன்)னுடன்
உம்பர் கோமகன் அமர் உடன்ற நாள்.
வெம்பி. மற்று அவன் வெற்றி கொண்ட போது.
அம்பரம் இழந்து. அவனி வந்தனன்;
 

தானவன் - அரக்கன்; உம்பர் கோமகன் - தேவர்களுக்கு அரசன்;
அமர்
- போர்; உடன்று - புரிந்து; அம்பரம்-விண்ணுலகம்.     24-2