பக்கம் எண் :

856பால காண்டம்  

65.‘அவனி வந்து. மன்னவர் இடம்தொறும்.
தவனன் என்னவே தான் உழன்று. அறிந்து.
“இவனில் வேறு மற்று இல்லை எற்கு” எனா.
உவன் விரும்பி வந்து. உந்தை நாடு உறா.

 

அவனி     - மண்ணுலம்; தவனன் - சூரியன்; உழன்று - திரிந்து;
இவனில்  
-  இவனை விட; எற்கு - எனக்கு; உந்தை - உனது தந்தை
(தயரதன்); எனா -  என்று;  உறா  - உற்று; இரண்டும் செயா என்ற
வாய்ப்பாட்டு வினை எச்சங்களாகும்.                     24
-3
 

66.‘இந்த இவ் இடத்து எய்தி. இந்திரன்.
“சந்த வார் பொழில் தரு ஒர் ஐந்தையும்
வந்து நிற்க” எனா. மன நினைப்பின்முன்.
முந்து வந்து மா முரல நின்றவால்.

 

எய்தி   - அடைந்து; சந்த - அழகிய; வார் - நீண்ட; தரு - மரம்
(கற்பகம்  முதலிய  ஐந்து);  நினைப்பின்  முன்  - நினைக்கும்  முன்;
மாமுரல
- வண்டுகள் ரீங்கரிக்க.                          24-4
 

67.‘நின்ற சோலைவாய். நியமம் நித்தமும்
குன்றல் இன்றியே செய்து கொண்டு. அவன்
நன்றியால் இருந்து. அரசை நண்ணியே.
துன்று சோலையின் தொழில் உணர்த்தினான்.

 

சோலைவாய்- சோலையிடம்; குன்றல் - குறைதல்;அரசை நண்ணி
- அரசை விரும்பி; துன்று சோலை - நெருங்கிய சோலை.       24-5
 

68.‘உருவம் மாறி. வேறு உருமாகியே.
நிருப! நின் குடை நிழலின் நிற்றலும்.
பரிவின் நோக்கி. “நீ பகர்தியால்” எனத்
தருவின் நாயகன்தான் விளம்பினான்;
 

உருவம்   மாறி - வேறு வடிவம் கொண்டு; நிருப - அரச; பரிவு -
அன்பு; பகர்தியால் -  கூறுக;  தருவின் நாயகன் -  கற்பக மரத்தின்
தலைவன்.                                           24-6
 

69.‘“சதமகன்தனைச் சம்பரன் எனும்
மத மகன் துரந்து அரசு வவ்வினான்;
கதம் அகன்றிடாக் கனக வெற்பு அவன்
விதம் அகன்று வந்து. உன்னை மேவினேன்.”