சதமகன் - இந்திரன்; மதுமகன் - மதம் கொண்ட அரக்கன் (சம்பரன்); துரந்து - வென்று; கதம் - கோபம்; மேவினேன் - அடைந்தேன். 24-7 |
| 70. | ‘என்றபோது தன் இரதம் ஏறியே சென்று. மற்று அவன் சேனையோடு உகக் கொன்று. வாசவன் அரசு கொள்ளவே அன்று அளித்து. மீண்டு அயோத்தி மேவினான். |
என்றபோது - எனக் கூறிய போது; உக - அழிய; வாசவன் - இந்திரன்; கொள்ள - அடைய; அளித்து - ஈந்து; மேவினான் - சேர்ந்தான். 24-8 |
| 71. | ‘அன்னது ஆதலின் அவனி வந்த கா இன்ன நாமம். இச் சோலை’ என்றலும். மன்னர்மன்னவன் மதலை. ‘நன்று’ எனா. பின்னை நன்று உயிர்ப் பிரியம் ஆயினார். |
அவனி - பூமி; கா - சோலை; இன்ன நாமம் - இந்தப் பெயர்; மன்னவர் மன்னவன் - தயரதன்; மதலை - மகன்; பின்னை - பிறகு. 24-9 |
7 தாடகை வதைப் படலம் |
| 72. | ‘கல் நவில் தோளினாய்! கமலத்தோன் அருள் மன்னுயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து. இன் உயிர் வளர்க்கும் ஓர் எரி கொள் கூற்றமே அன்னவள் யாவள் என்று அறையக் கேட்டியால்: |
கல்நவில் தோள்- கல்லையும் வென்ற தோள்; கமலத்தோன் - பிரமன்; வாய் மடுத்து - வாயில் பெய்து; கூற்றம் - எமன்; அறைய - கூற. 20-1 |
| 73. | ‘இயக்கர்தம் குலத்துளான். உலகம் எங்கணும் வியக்குறும் மொய்ம்பினான். எரியின் வெம்மையான். மயங்கு இல் சற்சரன். எனும் வலத்தினான். அருள் துயக்கு இலன் சுகேது என்று உளன் ஒர் தூய்மையான். |