பக்கம் எண் :

858பால காண்டம்  

இயக்கர்  -   கந்தருவர்;  மொய்ம்பு  -  வலிமை; வியக்குறும் -
வியப்படையும்;  வெம்மை  -  வெப்பம்;  துயக்கு - குற்றம்  (சற்சரன்
மகன் சுகேதுவாம்).                                     20-2
 

74.‘அன்னவன் மகவு இலாது அயரும் சிந்தையான்.
மன் நெடுந் தாமரை மலரின் வைகுறும்
நல் நெடு முதல்வனை வழுத்தி. நல் தவம்
பல் நெடும் பகல் எலாம் பயின்ற பான்மையான்.

 

அன்னவன்- அந்த சுகேது; மகவு - குழந்தை; இலாது - இல்லாது;
வைகுறும்
-  தங்கும்;  முதல்வன்  -  பிரமன்;  வழுத்தி - வணங்கி;
பல்நெடும் பகல்  
-  பல  நாட்கள்;  பயின்ற  - செய்த; பான்மை -
தன்மை.                                            20-3
 

75.‘முந்தினன் அரு மறைக்
   கிழவன். “முற்றும் நின்
சிந்தனை என்?” என.
   “சிறுவர் இன்மையால்
நொந்தனென்; அருள்க” என.
   “நுணங்கு கேள்வியாய்!
மைந்தர்கள் இல்லை; ஒரு மகள்
   உண்டாம்” என்றாள்.
 

முந்தினன்  - முன் வந்தான்; அருமறை - அரிய மறை; கிழவன் -
தலைவன்; சிந்தனை  -  எண்ணம்;  நுணங்கு  கேள்வி - நுட்பமான
கேள்வியறிவு.                                         20-4
 

76.“பூ மட மயிலினைப் பொருவும் பொற்பொடும்.
ஏமுறு மதலை ஈர்-ஐஞ்ஞூறுடைத்
தாம் மிகு வலியொடும் . தனயை தோன்றும்; நீ
போ” என. மலர் அயன் புகன்று போயினான்.

 

பூ மட மயில்- அழகிய இளமையான மயில்; பொருவும் - ஒக்கும்;
பொற்பு  
-  அழகு; மதமலை - மதங் கொண்ட யானை; ஈர்ஐந்நூறு -
ஆயிரம்;  வலி  -  வலிமை;  தனயை  -  மகள்;  மலர்  அயன்  -
பிரமன்.                                             20-5
 

77.‘ஆயவன் அருள்வழி. அலர்ந்த தாமரைச்
சேயவள் என வளர் செவ்வி கண்டு. “இவட்கு
ஆயவன் யார்கொல்?” என்று ஆய்ந்து. தன் கிளை
நாயகன். கந்தன் என்பவற்கு நல்கினான்.