பக்கம் எண் :

  மிகைப் பாடல்கள்859

ஆயவன்     -  அந்த பிரமன்; அலர்ந்த - மலர்ந்த; சேயவள் -
திருமகள்;  செவ்வி  - தன்மை; இவட்கு ஆயவன் - இவளுக்கு உரிய
கணவன்;   நாயகன்   -  தலைவன்;  என்பவற்கு  -  என்பவனுக்கு;
நல்கினான்
- தந்தான். 20-6
 

78.‘ “காமனும் இரதியும் கலந்த காட்சி ஈது
   ஆம்” என. இயக்கனும் அணங்கு அனாளும். வேறு
   யாமமும் பகலும் ஓர் ஈறு இன்று என்னலாய்.
   தாம் உறு பெருங் களிச் சலதி மூழ்கினார்.

 

காமன்   -    மன்மதன்; இயக்கன் - சுந்தன்; அணங்கு - தெய்வ
மகள்;அனாளும் -  அன்னாளும்; யாமம் - இரவு; ஈறு - முடிவு; சலதி
- கடல்;  பெருங்களி - பெரும் களிப்பு; தாம் உறு - தாம் உற்ற. 20.7
 

79.‘பற்பல நாள் செலீஇ. பதுமை போலிய
பொற்பினாள் வயிற்றிடை. புவனம் ஏங்கிட.
வெற்பு அன புயத்து மாரீசனும். விறல்
மல் பொரு சுவாகுவும். வந்து தோன்றினார்.

 

செலீஇ- சென்று; பதுமை - பாவை;போலிய - போன்ற; புவனம் -
உலகம்; வெற்பு - மலை; விறல் - வலிமை.                  20-8
 

80.‘மாயமும். வஞ்சமும். வரம்பும் இல் ஆற்றலும்.
தாயினும் பழகினார் தமக்கும் தேர்வு ஒணாது.
ஆயவர் வளர்வுழி. அவரை ஈன்ற அக்
காய் சினத்து இயக்கனும். களிப்பின் மேன்மையான்.
 

வரம்பு- எல்லை; இல் - இல்லாத; தேர்வு ஒணாது- தேர இயலாது;
வளர்வுழி
- வளரும் போது; இயக்கன் - கந்தர்வனாகிய சுந்தன்.  20-9
 

81.தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர.
மோதுறு கடல் எலாம் ஒரு கை மொண்டிடு
மா தவன் உறைவிடம் அதனின் வந்து. நீள்
பாதவம் அனைத்தையும் பறித்து வீசினான்.

 

தீது   உறும்- தீங்குடைய; அவுணர் - அரக்கர்; தீமை தீர்தர  -
தீங்கு தீர; எலாம் - எல்லாம்;மாதவன் - அகத்தியன்; நீள் பாதவம் -
பெரிய மரம் (மலையுமாம்.)                              20-10