பக்கம் எண் :

860பால காண்டம்  

82.‘விழைவு அறு மா தவம் வெஃகினோர் விரும்பு
உழை. கலை. இரலையை உயிர் உண்டு. ஓங்கிய
வழை முதல் மரன் எலாம் மடிப்ப. மா தவன்
தழல் எழ விழித்தனன்; சாம்பல் ஆயினான்.
 

விழைவு - விருப்பம்; உழை - பசு (மானுமாம்); கலை - கலைமான்;
இரலை  
-  புல்வாய்;  வழை  - சுரபுன்னை; மரன் - மரம்; மடிப்ப -
அழிக்க;  தழல்  -  நெருப்பு;  என  -  என்னும்படி;  விழித்தனன் -
விழித்தான்.                                          20-11
 

83.‘மற்றவன் விளிந்தமை மைந்தர் தம்மொடும்
பொற்றொடி கேட்டு. வெங் கனலின் பொங்குறா.
‘முற்றுற முடிக்குவென் முனியை’ என்று எழா.
நற்றவன் உறைவிடம் அதனை நண்ணினாள்.

 

விளிந்தமை     - இறந்ததனை; பொற்றொடி - பொன்  வளையல்
அணிந்த  தாடகை; கனல் -  தீ;  பொங்குறா  - பொங்கி; முற்றுற -
அடியோடு  (முழுதும்);  எழா  -  எழுந்து;  நற்றவன்  - அகத்தியன்;
நண்ணினான்
- அடைந்தான்.                           20-12
 

84.‘இடியொடு மடங்கலும் வளியும் ஏங்கிட.
கடி கெட அமரர்கள். கதிரும் உட்கிட
தடியுடை முகில் குலம் சலிப்ப. அண்டமும்
வெடிபட. அதிர்த்து. எதிர் விளித்து. மண்டவே.

 

வளி     - காற்று; அடங்கலும் - எல்லாமும்; கடிகெட - மகிழ்ச்சி
நீங்க;  கதிர்  -  சூரியன்; தடி உடை - மின்னலை உடைய; மண்ட -
நெருங்க.                                           20-13
 

85.‘தமிழ் எனும் அளப்ப அருஞ் சலதி தந்தவன்
உமிழ் கனல் விழி வழி ஒழுக. உங்கரித்து
“அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக!” என உரைத்தனன். அசனி எஞ்சவே.
 

அளப்ப   அரும் சலதி- அளக்க அரிய கடல்; தந்தவன் - தந்த
அகத்தியன்;  கனல்  உமிழ்  -  நெருப்பை உமிழ்கின்ற; உங்கரித்து -
ஊங்காரம் செய்து; இழிக - இழிந்தவர்களாகுக; அசனி - இடி.   20-14
 

86.‘வெருக்கொள. உலகையும் விண்ணுளோரையும்
முருக்கி. எவ் உயிரும் உண்டு. உழலும் மூர்க்கராம்