| அரக்கர்கள் ஆயினர். அக் கணத்தினில் உருக்கிய செம்பென உமிழ் கண் தீயினர். |
வெருக்கொள - அஞ்ச; முருக்கி - அழித்து; உழலும் - திரியும்; உருக்கிய செம்பு - உருக்கப்பட்ட செம்பு; உமிழ் கண் - உமிழ்கின்ற கண். 20-15 |
| 87. | ‘ஆங்கு அவன். வெகுளியும். அறைந்த சாபமும் தாங்கினர்; எதிர் செயும் தருக்கு இலாமையின். நீங்கினர்; சுமாலியை நேர்ந்து. “நிற்கு யாம் ஓங்கிய புதல்வர்” என்று. உறவு கூர்ந்தனர். |
வெகுளி- சினம்; அறைந்த - கூறிய; தருக்கு - வலிமை; நேர்ந்து - அடைந்து; நிற்கு - உனக்கு; கூர்ந்தனர் - அணுகினர். 20-16 |
| 88. | ‘அவனொடும் பாதலத்து அநேக நாள் செலீஇ. தவன் உறு தசமுகன் தனக்கு மாதுலர் இவர் என. புடைத்து அழித்து. உலகம் எங்கணும் பவனனின் திரிகுநர். பதகி மைந்தவர்கள். |
அநேக நாள் செலீஇ- பல நாட்கள் சென்று; தவன் - தவம்; தசமுகன் - இராவணன்; மாதுலர் - மாமன்மார்; பவனன் - சூரியன்; திரிகுநர் - திரிபவர்கள்; பதகி - பாதகி (தாடகை). 20-17 |
| 89. | ‘மிகும் திறல் மைந்தரை வேறு நீங்குறா. தகும் தொழில் முனிவரன் சலத்தை உன்னியே.- வகுந்துவின் வசுவரி வதிந்தது இவ் வனம் புகுந்தனள். - அழல் எனப் புழுங்கும் நெஞ்சினாள். |
மிகும் திறல்- மிகுந்த வலிமை;நீங்குறா - நீங்காத; சலம் - சினம்; வகுந்துவின் - வழிவழியாக; வசுவரி - வசுக்களின் தலைவனான இந்திரனது குற்றக் குறி; வதிந்தது - தங்கியது; அழல் - நெருப்பு. 20-18 |
| 90. | ‘மன்னர் மன்னவன் காதல! மற்றும் ஒன்று இன்னம் யான் உரைக்கின்றது யாது எனின். முன் ஒர் காலம் நிகழ்ந்த முறைமை ஈது’ என்ன ஓதலுற்றான் தவத்து ஈறு இலான். |