பக்கம் எண் :

862பால காண்டம்  

மன்னர்  மன்னவன்- தயரதன்; மற்றும் ஒன்று - இன்னும் ஒன்று;
உரைக்கின்றது  
-  சொல்லுவது;  ஓதல்  -  கூறுதல்;  ஈறுஇலான் -
முடிவில்லாதவன்.                                          39-1
 

91.‘பிருகு என்னும் பெருந் தவன்தன் மனை
வரு கயல் கண் கியாதி. வல் ஆசுரர்க்கு
உருகு காதலுற. உறவாதலே
கருதி. ஆவி கவர்ந்தனன். நேமியான்.

 
 

பிருகு-  பிருகு முனிவன்;  கயல்கண் - கயல் போன்ற கண்; வல்
ஆசுரர்க்கு   
-   வலிய   அசுரர்களுக்கு;   உறவாதல்   -   உறவு
உடையவதனால்; கருதி  -  எண்ணி;  ஆவி  -  உயிர்; நேமியான் -
ஆழிப்படையுடைய திருமால்.                                39-2
   

92.“வானகத்தினில். மண்ணினில். மன்னுயிர்
போனகம் தனக்கு” என்று எணும் புந்திய
தானவள் குமுதிப் பெயராள்தனை
ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர்கோன்.

 
 

போனகம்- உணவு; எணும்  -  எண்ணும்;  புந்தி - மனம்; ஊன்
ஒழித்தல்
- கொல்லுதல்; வச்சிரத்து உம்பர்கோன் - இந்திரன்.  39-3
 

93.‘ஆதலால். அரிக்கு. ஆகண்டலன்தனக்கு.
ஓது கீர்த்தி உண்டாயது அல்லால். இடை
ஏதம் என்பன எய்தியவோ? சொலாய்-
தாது அடர்ந்து தயங்கிய தாரினாய்!’

 
 

அரி- திருமால்; ஆகண்டலன் - இந்திரன்; கீர்த்தி - புகழ்; ஏதம்
-  குற்றம்; சொலாய் - சொல்லாய்;  தாது - மகரந்தம்;  அடர்ந்து  -
செறிந்து; தயங்கிய - விளங்கிய; தார் - மாலை.              39-4
 

94.ஏக்கமோடும் இமையவர் எங்கணும்.
வாக்கின் முந்துற மாயை வளர்ப்பவள்.
மூக்கும் வார் செவியும் முறை போயிட.
தாக்கும் வள்ளற்கு இளவலும் தாக்கினான்.

 
  

வாக்கின்- பேச்சுக்கு; முந்துற  -  முன்னம்;  மாயை  - மாயைச்
செயல்; போயிட - போக; இளவல் - இலக்குவன்.              48-1
 

95.விலக்கி நின்று. அவன் வெங் கணை
   விரைவினில் விலக்கி.