பக்கம் எண் :

  மிகைப் பாடல்கள்863

96.கலக்கம் வானவர் தவிர்ந்திட.
   காலனும் கலங்கத்
துலக்கி. வையகத்து இடுக்கணும்
   முனிவர்தம் துயரும்
உலக்க. ஊழித் தீ ஒப்பது ஓர் கணை
   தொடுத்து எய்தான்.

 
  

வெங்கணை   -  கொடிய  அம்பு;  காலன் - எமன்; இடுக்கண் -
துன்பம்;  உலக்க  -  நீங்க; ஊழித்தீ - ஊழிக்காலத்துத் தீ; ஒப்பது -
ஒத்தது.                                                 48-2

                                    8 வேள்விப் படலம்
 

96.‘குசன். குசநாபன். கோது இல்
   குணத்தின் ஆதூர்த்தன். கொற்றத்து
இசை கெழு வசு. என்று ஓதும்
   இவர் பெயர்; இவர்கள் தம்முள்
குசன் கவுசாம்பி. நாபன்
   குளிர் மகோதயம். ஆதூர்த்தன்
வசை இல் தன்மவனம். மற்றை
   வசு கிரிவிரசம். வாழ்ந்தார்.

 
 

கோது இல்- குற்றமில்லாத; இசை கெழு - புகழ் விளங்கும்; ஓதும்
- கூறும்; குளிர் - குளிர்ந்த; வசை இல் - குற்றமில்லாத.         4-1
   

97.குறியவன் கையில் நீர் விழாமல். குண்டிகை
மறிபட. வாமனன் மலர்க் கைத் தர்ப்பையால்.
செறிவது நீக்கிட. சிதைந்து கண் உடைந்து
உறு துயர் வெள்ளியும் ஒதுங்கிப் போயினான்.

 
 

குறியவன்- வாமனன்; குண்டிகை - கமண்டலம்; மறிபட - தடுத்து
நிற்க;  செறிவது -  செறிந்து நிற்பது; உடைந்து - கெட்டு; உறுதுயர் -
மிக்க துயர்.                                              23-1
   

98.நீட்டிய வேலையில் நீரை மாற்றினான்;
நாட்டம்அது அகத்துளான். சிலம்பின் நாமத்தான்.
ஓட்டினன் தருப்பையை; உடை கண் நீர் விழ.
வாட்டம் இல் அந்தணன் மலர்க்கை நீட்டினான்.

 
 

வேலை  - சமயம்; சிலம்பின் நாமத்தன் - வெள்ளி; அந்தணர் -
வாமனன்;  வாட்டம் இல் -  வாட்டமில்லாத;  மலர்க் கை  -  மலர்
போன்ற கை.                                            23-2