பக்கம் எண் :

  மிகைப் பாடல்கள்865

“என்னை ஆளுடை நாயகிக்கு
   இசை எடுப்பவள்” என்று.
அன்னள் தாள் இணை வணங்கிநின்று
   ஏத்தலும். அனையாள்.
 

அந்த     வித்தியாதரப்பெண் பூமாலையை யாழிலே கட்டிக்கொண்டு
பிரம்மலோகம்   திரும்பினாள்.     அப்பொழுது   துருவாச  முனிவன்
அவளை எதிரே கண்டு அவளடிகளில்   வீழ்ந்து வணங்கினான் என்பது.
இதனால்  துருவாசரின்  திருமால்  பக்தி   புலனாகிறது. இவன் பிறரைச்
சபிக்கச்  சபிக்கத்  தவம்  வளரும் வரம்    பெற்றவன். இவன் அத்திரி
முனிவன் மகன்.                                           3-3
 

102.‘ “உலகம் யாவையும் படைத்து. அளித்து.
   உண்டு. உமிழ். ஒருவன்
இலகு மார்பகத்து இருந்து. உயிர்
   யாவையும் ஈன்ற
திலக வாணுதல் சென்னியில்
   சூடிய தெரியல்.
அலகு இல் மா முனி! பெறுக” என
   அளித்தனள் அளியால்.

 
 

உலகம் யாவையும்  படைத்து. அளித்து. உண்டு உமிழ் ஒருவன்
-திருமாலின் முத்தொழில் பேசப்பெறுகின்றன.

அவ்வித்தியாதர  மகள்  தன்  யாழில்  கட்டிய  அப் பூமாலையைத்
துருவாச முனிவனுக்குக் கொடுத்தாள் என்பது.                   3-4
 

103.‘ “தெய்வ நாயகி சென்னியில்
   சூடிய தெரியல.
ஐய! யான் பெறப் புரிந்தது
   எத் தவம்?” என ஆடி.
வெய்ய மா முனி சென்னியில்
   சூடியே. வினை போய்
உய்யும் ஆறு இது
   என்று உவந்து வந்து. உம்பர் நாடு அடைந்தான்.

 
 

வினை போய் உய்யுமாறு-  கருமம்  ஒழிந்து நற்கதி பெறும்விதம்
இதுவென்று; தெய்வ நாயகன் - திருமால்; தெய்வ நாயகி - திருமகள்.