தேவர்களின் தலைவியான திருமகளின் பூமாலையைத் தான் பெறுவதற்கு என்ன மாதவம் செய்தேன் என மகிழ்ந்து அதைத்தன் முடியிலே சூடிக்கொண்டு தெய்வலோகம் சென்றான் என்பது. 3-5 |
| 104. | ‘பெய்யும் மா முகில் வெள்ளிஅம் பிறங்கல் மீப் பிறழும் செய்ய தாமரை ஆயிரம் மலர்ந்து. செங் கதிரின் மொய்ய சோதியை மிலைச்சிய முறைமை போன்று ஒளிரும் மெய்யினோடு. அயிராவதக் களிற்றின்மேல் விளங்க. |
யானைக்கு மலை உவமை - வலிமை. பெருமை. மதநீர் அருவியுடைமை பற்றி; ஐராவதம் - இந்திரனது பட்டத்து யானை; நான்கு தந்தங்களையுடையது; வெண்மை நிறமுடையது. இந்திரன் ஐராவத யானைமேல் வீற்றுள்ள சிறப்பைச் சொல்வது இப்பாடல். ஐராவதத்தின் மேல் வீற்றிருப்பதால் இந்தரனுக்குச் சிறப்பு; இந்திரன் வீற்றிருப்பதால் ஐராவதத்திற்குச் சிறப்பு. 3-6 |
| 105. | ‘அரம்பை. மேனகை. திலோத்தமை. உருப்பசி. அனங்கன் சரம் பெய் தூணியின் தளிர் அடி நூபுரம் தழைப்ப. கரும்பையும் சுவை கைப்பித்த குதலையர். விளரி நிரம்பு பாடலோடு ஆடினர். வீதிகள் நெருங்க. |
அரம்பை - நளகூபரனின் போகமடைந்தை; திலோத்தமை - பிரமனால் படைக்கப்பட்டவள்; ஊர்வசி - நாராயண முனிவனது தொடையிலிருந்து (ஊரு) தோன்றியவள். அரம்பை முதலான தேவதாசிகள் நால்வரும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் தெருக்களில் சென்றார்கள் என்பது. 3-7 |
| 106. | ‘நீல மால் வரை தவழ்தரு கதிர் நிலாக் கற்றை போலவே. இரு புடையினும். சாமரை புரள. |