பக்கம் எண் :

மந்தரை சூழ்ச்சிப் படலம் 103

இளைய மான் போலும் கைகேயியின்;  இரக்கம் இன்னை அன்றோ -
கருணை இல்லாத தன்மையால்அல்லவா; இவ் உலகங்கள் - இந்த உலகம்
எல்லாம்;  இன்று - இன்றைக்கும்; இராமன் - இராமபிரானது;  பரக்கும் -
எங்கும் பரந்து  செல்லும்;  தொல்புகழ்அமுதினை - பழமையாகிய புகழ்
என்கின்ற அமுதத்தை; பருகுகின்றதுவே - (செவிகளால்)உண்டு (ஆனந்தம்
அடைகின்றது)!

     கைகேயியின் மனமாற்றம் நிகழவில்லையானால் இராமாயண காவியம்
தான்றாதாம்; இராமன்புகழை அனுபவிக்க உலகத்திற்கு வாய்பு  இல்லையாம்.
கைகேயி  மனம் திரிந்ததும் நல்லதாயிற்று. இராமன் புகழை உலகம் உண்டு
பருகித் தேக்கெறிய உதவி செய்தது  என்றார். புகழை அமுதென்றார்.
கேட்போர்க்குப் பிறவா நெறியாகிய பரமபதம் தந்து அருளுதலின், இங்கும்
‘அரக்கர் பாவமும் அல்லவர்  இயற்றிய அறமும் ஆகிய பெரிய
காரணங்களே உள் நின்று தூமொழி மடமானை இரக்கம் அற்றவளாகச்
செய்தது என்றது காண்க. கைகேயியால் அல்லவா சிறையிருந்தவள் ஏற்றம்
செப்பும்  ஸ்ரீராமகதை கிடைத்தது என்று  தீமையிலும் நன்மை தோன்றக்
கூறினார்.                                                    86

மனமாற்றம் அடைந்த கைகேயி பரதன் முடிசூட உபாயம் கேட்டல்  

1485.அனைய தன்மையள் ஆகிய
     கேகயன் அன்னம்,
வினை நிரம்பிய கூனியை
     விரும்பினள், நோக்கி,
‘எனை உவந்தனை; இனியை என்
     மகனுக்கும்; அனையான்
புனையும் நீள் முடி பெறும்படி
     புகலுதி’ என்றாள்.

     அனைய தன்மையள் ஆகிய - அப்படிப்பட்ட மனம் மாறின
தன்மை உடையளாகிய; கேகயன்அன்னம் - கைகேயி; வினை நிரம்பிய
கூனியை
- சூழ்ச்சி நிறைந்தவளாகிய மந்தரையை;விரும்பினள் நோக்கி -
விரும்பிப் பார்த்து; ‘எனை உவந்தனை - என்னிடம்பிரியம் வைத்துள்ளாய்;
(நீ) என் மகனுக்கும் இனியை - நீ என்மகனாய பரதனுக்கும் நல்லவளே;
அனையான் - அந்தப் பரதன்;  புனையும் நீள்முடி - அழகு செய்யப்
பெற்ற உயர்ந்தமுடியை; பெறும்படி - அடையும் விதத்தை;  புகலுதி -
சொல்லுக;’ என்றாள்.

     எடுத்த காரியத்தை எப்படி முடிப்பது  என்பதில் தேர்ந்தவள் கூனி,
தன் முதுகில் உண்டையடித்தான்என்பதனால்  வஞ்சம் கொண்டு பழி
வாங்கும் உணர்வுடன் இராமனைக் காட்டுக்கு அனுப்புவதே அவள் நோக்கம்;
பரதனைப் பற்றி அவளுக்குக்  கவலை  இல்லை; ஆயினும் தன் நோக்கம்
நிறைவேறக் கைகேயியையும்பரதனையும் கருவியாக அவள்
பயன்படுத்திக்கொண்டாள்.  இதனை முடிக்கச் சதரப்பாடான சொற்றிறமையும்.
கைகேயியின் பலவீனமும் எது