பக்கம் எண் :

106அயோத்தியா காண்டம்

  ஒருவழிப்படும் உன் மகற்கு;
     உபாயம் ஈது’ என்றாள்.

     ‘இரு வரத்தினில் - அவ்விரண்டு வரங்களுள்; ஒன்றினால் - ஒரு
வரத்தால்;அரசு கொண்டு - அரசாட்சியை  உன் மகனதாக
ஆக்கிக்கொண்டு;  ஒன்றினால் - மற்றொன்றினால்;இராமன் -;
பெருவனத்திடை -
பெரிய காட்டின்கண்;  ஏழ் - இருபருவங்கள் -
பதினான்கு ஆண்டுகள்;  பெயர்ந்து  திரிதரச் செய்தி -
(அயோத்தியிலிருந்து)நீங்கி ஓரிடத்தில் இல்லாமல் சுற்றியலையச்
செய்வாயாக;  (செய்தால்) உன் மகற்கு -உன் மகனாகிய  பரதனுக்கு;
செழுநிலம் எல்லாம் - வளப்பமான உலகமுழுதும்;  ஒரு வழிப்படும்-
அடங்கி நேர்படும்;  ஈது  உபாயம் - இதுவே உபாயமாகும்;  என்றாள் -

     பருவம் என்பது  இங்கு ஆண்டைக் குறித்தது.  கூனிக்கு இராமன்பால்
உள்ள சீற்றம் இங்குவிளங்குகிறது. ‘பெருவனம்’ என்பதும், ‘திரிதரச் செய்தி’
என்பதும் அதைக் காட்டும், பரதனுக்குஅரசு கிடைப்பதைவிட, இராமன் காடு
செல்வதிலேயே கூனிக்கு நாட்டம். இராமன் ஏன் காடு செல்ல வேண்டும்
என்று கைகேயி கேட்கக் கூடும் என்று கருதி இராமன் இங்கேயே இருந்தால்
நாடு பரதன் வசப்படாது;ஆதலால்,  நாடு முழுவதும் பரதன் வசப்படி
வேண்டுமாயின் இராமன் கோசலத்தில் இல்லாமல் இருப்பதுதான்நல்லது
என்றாள் கூனி.  இராமன் காடு செல்ல வரம் கேட்டு அவனைக் காட்டுக்கு
அனுப்பிவிட்டால் இருப்பவருள் மூத்தவன் பரதன் நாடாள்வதில் சிக்கல்
இல்லை; முறையும் தவறாது என்று கருதினாள்எனலும் ஆம். இம்முறையில்
இராமனைக் காட்டுக்கு அனுப்ப ஒரு வரம் கேட்டலே  போதும் ‘செழுநிலம்
எல்லாம் உன் மகற்கு வழிப்படும்’ என்றும் கூனி நினைத்துரைத்தாள் எனலும்
ஆம்.                                                        90

கூனியைக் கைகேயி மகிழ்ந்து பாராட்டுதல்  

1489.உரைத்த கூனியை உவந்தனள்,
     உயிர் உறத் தழுவி,
நிரைத்த மா மணி ஆரமும்
     நிதியமும் நீட்டி,
‘இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு
     மகற்கு ஈந்தாய்;
தரைக்கு நாயகன் தாய் இனி நீ’
     எனத் தணியா.

     உரைத்த கூனியை - (இவ்வுபாயம்) சொன்ன மந்தரையை;  (கைகேயி)
உவந்தனள் -மகிழ்ந்து;  உயிர் உறத் தழுவி - இறுகத் தழுவிக் கொண்டு;
மாமணி நிரைத்த ஆரமும்நிதியமும் நீட்டி - சிறந்த மணிக்கற்கள்
வரிசையாக வைத்துச் செய்யப் பெற்ற மாலையும்,ஏனைய செல்வங்களும்
அளித்து; ‘என் ஒரு மகற்கு - என் ஒப்பற்ற