முத்த மூரல் முறுவலார்-பூமியைச் சூழ்ந்துள்ள கடலில் தோன்றிய முத்துப் போன்ற பற்களையும் புன்னகையையும் உடையபெண்களுடைய; அணியின் சோதி - ஆபரணங்களின் ஒளிக்கதிர்கள்; வளைக்கலாம்என்று - தேவலோகத்தையும் வளைத்துக் கொள்ளலாம் என்று கருதி; அவ் வானோர் கண்ணையும் - அந்தக் தேவர்களின் கண்களையும்; மறைத்த - மறைத்தன; கோடி என்பது மிகுதி குறித்தது. ‘மறைத்த’ என்னும் பலவின்பால் வினைமுற்றுக்கேற்ப ஒளி, சோதி என்பவற்றை ஒளிக்கதிர்கள் என்று பன்மையாகக் கொள்ளல் வேண்டும். இன்றேல், ஒருமைபன்மை மயக்கமாகும். அன்று, ஏ - அசைகள். 79 வசிட்ட முனிவன் வருகை | 1570. | ஆயது ஓர் அமைதியின்கண், ஐயனை மகுடம் சூட்டற்கு ஏயும் மங்கலங்கள் ஆன யாவையும் இயையக் கொண்டு, தூய நான்மறைகள் வேதபாரகர் சொல்ல, தொல்லை வாயில்கள் நெருக்கம் நீங்க, மா தவக் கிழவன் வந்தான். |
ஆயது ஓர் அமைதியின்கண் - அத்தகைய சூழலில்; மாதவக் கிழவன் - பெரிய தவத்தைச் செய்த வசிட்ட முனிவன்; ஐயனை மகுடம் சூட்டற்கு - இராமபிரானைமுடிசூட்டுவதற்கு; ஏயும் மங்கலங்கள் ஆன யாவையும் - பொருந்திய மங்கலப் பொருள்களாகியஎல்லாவற்றையும்; இயையக் கொண்டு - பொருத்தமுற எடுத்துக்கொண்டு; வேத பாரகத் தூயநான்மறைகள் சொல்ல - வேதங்களைக் கரை கண்டவர்களான அந்தணர்கள் தூய்மையான நான்குவேதங்களை ஓதிவர; தொல்லை வாயில்கள் நெருக்கம் நீங்க - பழைய வாயில்களில்உள்ளவர்கள் நெருக்கத்தை நீங்கி விலகிக்கொள்ள; வந்தான் - முடிசூட்டு மண்டபத்துக்கு எழுந்தருளினான். வசிட்ட முனிவன்மீது உள்ள மரியாதையால் அங்கங்கே வாயில்களில் நின்றவர்கள் விலகிவழிவிட்டனர். வாயில்கள் பழையன எனினும் நெருக்கம் புதியது. வேத பாரகர். - வேதத்தைக்கரை கண்டவர்கள்; பாரம் - அக்கரை. 80 வசிட்ட முனிவன் செயல் | 1571. | கங்கையே முதல ஆய கன்னி ஈறு ஆன தீர்த்த மங்கலப் புனலும், நாலு வாரியின் நீரும் பூரித்து. |
|