‘துனி வரு - துன்பம் வருதற்குக் காரணமாகிய ; புலன் எனத் தொடர்ந்து - ஐம்புலன்கள் என்னும் பெயரையுடையனவாக உயிரைப் பற்றிக்கொண்டு ; தோற்கலா - தோல்வியுறாத ; நனிவரும் பெரும் பகை நவையின் நீங்கி -மிகுதியாக வருகின்ற பெரிய பகையினால் வரும் குற்றங்களினின்றும் விலகி ; அத் தனிஅரசாட்சியில் - அந்த ஒப்பற்ற வீட்டரசை ஆளுவதில் ; தாழும் உள்ளம் -ஈடுபடும் மனமானது ; இனியது போலும் இவ் அரசை - இனியது போலத் தோற்றும் இந்த உலகினை ஆளும் அரசாட்சியை ; எண்ணுமோ - ஒரு பொருளாக மதிக்குமோ?(மதிக்காது)’ புலன் எனத் தொடர்ந்து என்பது “நாள்என ஒன்றுபோல் காட்டி” என்பது போலவருவது. புறப்பகையினும் அகப்பகை கொடிதாதலின் பெரும்பகை எனப்பட்டது. அரச பதவி துன்பமின்றித்தொழத்தக்கது அன்றாதலின் ‘இனியது போலும் அரசு’ என்றார். கீழ் உள்ள பாடல்களில் துறவின்பெருமை பேசி, இதில் அத்துறவில் தன்மனம் செல்வதைத் தெரிவிக்கிறான் தயரதன். 22 | 1336. | ‘உம்மை யான் உடைமையின், உலகம் யாவையும் செம்மையின் ஓம்பி, நல் அறமும் செய்தனென் ; இம்மையின் உதவி, நல் இசை நடாய நீர், அம்மையும் உதவுதற்கு அமையவேண்டுமால். |
‘யான் உம்மை உடைமையின் - நான் உங்களை மந்திரக் கிழவர்களாகப்பெற்றதால் ; உலகம் யாவையும் - உலகம் முழுவதையும்; செம்மையின்ஓம்பி - முறையாகப் பேணிக் காத்து ; நல் அறமும் செய்தனென் - சிறந்தஅறச் செயல்களையும் செய்தேன் ; இம்மையின் உதவி - இவ்வாறு இவ்வாழ்வில்எனக்கு உதவி செய்து; நல் இசை நடாய நீர் - எனது நல்ல புகழை பரவச் செய்தநீங்கள்; அம்மையும் உதவுதற்கு- அவ்வுலகப் பேற்றுக்கும் உதவி செய்தவற்கு ; அமைய வேண்டும் - மனங்கொள்ள வேண்டும்.’ ஆல் - அசை. நல்லறமாவது தானம், வேள்வி முதலிய புரிதலாகும். “ஈந்தேகடந்தான் இரப்போர் கடல்” (172) என அரசியற் படலத்துள் தயரதன் செய்த அறச்செயல்பேசப்பட்டுள்ளமை காணலாம். அம்மை - மறுமை. 23 | 1337. | ‘இழைத்த தொல் வினையையும் கடக்க எண்ணுதல், தழைத்த பேர் அருளுடைத் தவத்தின் ஆகுமேல், குழைத்தது ஓர் அமுதுடைக் கோரம் நீக்கி, வேறு அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகுமோ? |
‘இழைத்த தொல் வினையையும் - ஒருவன் செய்த பழமையான வினைகளின்பயன்களையும் ; கடக்க எண்ணுதல் - தாண்டிச்செல்லக் கருதுவது ; தழைத்தபேர் அருள் உடைத் தவத்தின் ஆகுமேல் - மிகுந்த பெரிய அருளையுடைய தவத்தினால்உண்டாகுமானால், (அத்தவத் |