பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 185

‘மன்னவன் ஏவியது’ என்று கோசலை கூறினாள் என்க.  ‘ஏவினன் அரசன்’
(1601) என முன்னும்வந்தது. ‘மூத்தவனுக்கு அரசு உரியது’  என்ற கருத்தில்
உள்ளவள் கோசலை ஆதலின், ‘நும்பிக்குநானிலம் நீ கொடுத்து’  என்று
கூறினாள். ‘ஆல்’  உரையசை.                                    5

1611.தாய் உரைத்த சொல் கேட்டுத் தழைக்கின்ற
தூய சிந்தை அத் தோம் இல் குணத்தினான்,
‘நாயகன், எனை நல் நெறி உய்ப்பதற்கு
ஏயது உண்டு, ஒர் பணி’ என்று இயம்பினான்.

     தாய் உரைத்த சொல் கேட்டு - தாயாகிய கோசலை கூறிய
சொற்களைக் கேட்டு; தழைக்கின்ற - மகிழ்ச்சி அடைகின்ற; தூய சிந்தை-
தூய்மையான மனம் உடைய;  அத் தோம் இல் குணத்தினான் - அந்தக்
குற்றம் இல்லாத குணத்தை உடைய இராமன்; (அவளைநோக்கி) ‘நாயகன்-
தயரதச் சக்கரவர்த்தி; எனை நல்நெறி உய்ப்பதற்கு - என்னை நல்ல
வழியில் செலுத்துவதற்கு; ஏயது - ஏவிய;  ஓர் பணி உண்டு’ -  ஒரு
கட்டளை உள்ளது;  என்று இயம்பினான் - என்று சொன்னான்.

     கானகம் ஏகச் சொன்னான் என்று முதலிற் கூறாமல்  ‘நன்னெறி
உய்ப்பதற்கு’ என்று கூறியது தாயின் மனத்தைத் திடப்படுத்தக் கூறியதாக
அமைந்து  அழகு செய்கிறது.  இங்கம் தந்தைஎன்னாமல் ‘சக்கரவர்த்தி’
என்னும் பொருளில் ‘நாயகன்’ என்றது  காண்க. பரதனைப் பற்றிக்கோசலை
கூறிய சொற்கள் இராமனை மகிழ்ச்சியில் ஆழ்த்தின என்பது  இராமனின்
குண அழகைமேலும்  ஒளிவிடச் செய்வதாம்.                       6

1612.“ஈண்டு உரைத்த பணி என்னை” என்றவட்கு.
‘ “ஆண்டு ஓர் ஏழினொடு ஏழ், அகன் கானிடை,
மாண்ட மா தவத்தோருடன் வைகி, பின்,
மீண்டு நீ வரல் வேண்டும்” என்றான்’ என்றான்.

     ‘ஈண்டு - இவ்விடத்தில்;  உரைத்த - (சக்கரவர்த்தி உனக்குச்)
சொல்லிய;  பணி என்னை’ - கட்டளை யாது;  என்றவட்கு - என்று
கேட்டகோசலைக்கு;  ஓர் ஏழினோடு ஏழ் ஆண்டு - ஒரு பதினான்கு
ஆண்டுக் காலம்;  அகன்கானிடை - அகன்ற காட்டிடத்தில்;  மாண்ட -
மாட்சிமை பொருந்திய;  மாதவத்தோருடன் - முனிவர்களுடன்;  வைகி -
தங்கி;  பின் - பிறகு;  நீ மீண்டு வரல் வேண்டும் - நீ திரும்பி வருதல் 
வேண்டும்;  என்றாள்’ - என்று கூறினான்;  என்றான் -.

     கோசலை வருந்தாதிருக்கக் ‘காட்டிற்கு அனுப்பி விட்டான்’என்று
கூறாமல், முனிவர்களுடன் தங்கித் திரும்பிவருதல் வேண்டும் என்று நாயகன்
பணித்தான்என்ற இராமன் சொல்திறம் போற்றுதற்குரியது. ஈண்டு -
முன்னிலையிடத்தின் கண் வந்தது.                                 7