| 1632. | ‘அவனி காவல் பரதனது ஆகுக; இவன் இஞ்ஞாலம் இறந்து, இருங் கானிடைத் தவன் நிலாவகை காப்பென், தகவினால் புவனி நாதன்- தொழுது’ என்று, போயினாள். |
‘அவனி காவல் பரதனது ஆகுக - இந்த உலகத்தை ஆளும் அரசாட்சி பரதனுடையதுஆகட்டும்; இவன் - இராமன்; இஞ்ஞாலம் இறந்து - இக் கோசல நாட்டைத்தாண்டி; இருங் கானிடை - பெரிய காட்டிடத்தே; தவன் நிலாவகை - தவத்தில்நில்லாதபடி; தகவினால் - நடுவு நிலைமையால்; புவனி நாதன் தொழுது - தயரதனைவணங்கி வேண்டி; காப்பென் - ‘காப்பாற்றுவேன்; என்று போயினாள் - என்று (தயரதன் இருக்கும் கைகேயி அரண்மனைக்கு) சென்றாள். முறைப்படி அரசன்பால் வேண்டி அவன் இட்ட ஆணையே மாற்ற எண்ணுதலின் ‘தகவினால்’என்றார். தவம், தவன் என்றமைந்தது ஈற்றுப் போலி. 27 இராமன் சுமித்திரை மாளிகை அடைதல் | 1633. | போகின்றாளைத் தொழுது, புரவலன் ஆகம் மற்று அவள்தன்னையும் ஆற்றி, இச் சோகம் தீர்ப்பவள்’ என்று, சுமித்திரை மேகம் தோய் தனிக் கோயிலை மேயினான். |
(இராமன்) போகின்றானைத் தொழுது - செல்கின்ற கோசலையை வணங்கி; புரவலன்ஆகம் மற்று அவள் தன்னையும் - தயரதனது உடம்பையும் கோசலையையும்; ஆற்றி -துன்பத்திலிருந்து ஆறுதல் அடையச் செய்து; இச்சோகம் தீர்ப்பவள்’ - இந்தத் துயரநிலையை நீக்கக்கூடியவள்; என்று - எனக் கருதி; சுமித்திரை -சிற்றன்னையாகிய சுமித்திரையின்; மேகம் தோய் தனிக்கோயிலை - மேகம்தங்குகின்ற உயர்ந்த ஒப்பற்ற மாளிகையை; மேயினான் - அடைந்தான். ‘புரவலனது ஆகமாகிய மற்றவள்’ எனவும் உரைப்பர். ‘மன்னன் உயி்ர் அவள் உடல்’என்றார். 28 கோசலை தயரதன் நிலை கண்டு புலம்புதல் | 1634. | நடந்த கோசலை, கேகய நாட்டு இறை மடந்தை கோயிலை எய்தினள்; மன்னவன் |
|