| | கிடந்த பார்மிசை வீழ்ந்தனள் - கெட்டு உயிர் உடைத்த போழ்தின் உடல் விழுந்தென்னவே. |
நடந்த கோசலை - தயரதன் இருக்கும் இடத்துக்கு நடந்து சென்ற கோசலை; கேகயநாட்டு இறை மடந்தை - கேகய நாட்டு மன்னனுக்கு மகளாகிய கைகேயியின்; கோயிலை -மாளிகையை; எய்தினள் - அடைந்தாள்; மன்னவன் கிடந்த பார்மிசை - தயரதன்விழுந்து கிடக்கின்ற மண்ணில்; உயிர் கெட்டு உடைந்த போழ்தின் - உயிர் கெட்டுச்சிதறிய காலத்து; உடல் விழுந்து என்னவே - உடலானது கீழே விழுந்தாற் போல; வீழ்ந்தனள் - விழுந்தாள். 29 அறுசீர் ஆசிரிய விருத்தம் | 1635. | ‘பிறியார் பிரிவு ஏது?’ என்னும்; ‘பெரியோய் தகவோ!’ என்னும்; நெறியோ, அடியேன் நிலை? நீ நினையா நினைவு ஏது?’ என்னும், ‘வறியோர் தனமே!’ என்னும்; ‘தமியேன் வலியே!’ என்னும்; ‘அறிவோ; வினையோ?’ என்னும்; ‘அரசே! அரசே!’ என்னும். |
(கோசலை தயரதன் நிலை கண்டு) ‘பிறியார் பிரிவு எது?’ என்னும்- பிரியக்கூடாதவர்களுடைய பிரிவுக்குக் காரணம் என்ன என்பாள்; பெரியோய்! தகவே’ என்னும் - பெருமை உடையவனே! இது உனக்குத் தகுதியோ என்பாள்; நெறியோ, ‘அடியேன்நிலை - அடியோங்களாகிய எங்கள் தற்போதைய நிலை நீதியாகுமா?; நீ நினையா நினைவுஏது’ என்னும் - இந்த நிலையை நீ நினையாமல் இருப்பது என்ன காரணம் என்பாள்; ‘வறியோர் தனமே!’ என்னும் - வறுமையுற்றவர்களுக்குச் செல்வமானவே என்பாள்; ‘தமியேன் வலியே!’ என்னும் - தனியளான எனக்கு வலிமையான துணையே என்பாள்; ‘அறிவோ,வினையோ’ என்னும் - இது உனக்கு அறிவு தானோ, அறிந்து செய்யாது ஊழ்வினையால்ஏற்பட்டதோ என்பாள்; ‘அரசே! அரசே!’ என்னும் - மன்னனே மன்னனே என்றுபுலம்புவாள். ‘பிரியார்’ என்பது எதுகை நோக்கி ‘பிரியார்’ என வல்லினமாயிற்று என்றும்பிரியாதவர்களாகிய நாம் இன்று பிரிய நேருமோ என்று கூறிக் கோசசலை அஞ்சினாள் ஆயிற்று.‘அறிவு ஒலினையோ’ என்ற ஆக்கி, அறிவு |