பக்கம் எண் :

198அயோத்தியா காண்டம்

திருவே! -செல்வங்களுக்கெல்லாம் மேலான செல்வமே; நிரை ஆர்
கலையின் கடவே! -
ஒழுங்குபொருந்திய கல்விக்கலையில் கடல்
ஆனவனே;  நெறி ஆர் மறையின் நிலையே! - நீதிபொருந்திய
வேதத்தின் உன்மைப் பொருளே;  கருணாலயனே! - அருட்கோயிலாக
உள்ளவனே; உலகு ஏழ் உடையாய்! - ஏழ் உலகங்களையும் உடையவனே;
கரையா அயர்வேன் எனை -மனம் உருகிச் சோர்வடைகின்ற  என்னை;
நீ என் என்று  உரையா இதுதான் அழகோ’ - நீஏன் வருந்துகிறாய்
என்று ஆறுதல் கூறாது இப்படிக் கிடப்பதுதான் அழகாகுமோ; என்னும்-

     தன் மனைவிபடும் துயரத்தைக் கண்டுவைத்தும் எழுந்து அவளுக்கு
ஆறுதல் சொல்லாது  கணவன்கிடக்கின்ற நிலை கண்டு மனம்  வருந்திப்
புலம்பினாள்.                                                 32

1638.‘மின் நின்றனைய மேனி,
     வெளிதாய்விட நின்றதுபோல்
உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய்
     உறுகின்று உணரான்;
என் என்று உரையான்; என்னே?
     இதுதான் யாது என்று அறியேன்;
மன்னன் தகைமை காண
     வாராய்; மகனே!’ என்னும்.

     ‘மகனே! - இராமனே;  மின் நின்றனைய மேனி - மின்னல்
மறையாது ஒருபடித்தாக நின்றால் ஒத்த ஒளிவீசும் உடம்பு;  வெறிதாய்
விட நின்றது  போல்  -
உள்ளே உயிரற்றுக் கிடப்பது போல;  உன்னும்
தகைமைக்கு அடையா உறுநோய் -
நினைக்கும்தன்மைக்கும் வாராத
பெரும் பிணியை;  உறுகின்ற உணரான் - அடைகின்றதையும்  உணர
முடியாதவனாய்;  என்என்று உரையான் - அழுகின்ற என்னைப் பார்த்து
ஏன் புலம்புகிறாய் என்றும் சொல்லாதவனாய்உள்ளான் உன் தந்தை;
என்னே! - என்ன காரணமோ; இதுதான் யாது என்று அறியேன் -இது
எதனால் ஆகியது  என்று அறியாதவளாக இருக்கின்றேன்;  மன்னன்
தகைமை காண -
அரசனாய் தயரதனது நிலைமையைப் பார்க்க;
வாராய்’ -  வருவாயாக;  என்னும் -

     உணர்வு இழந்து மூர்ச்சித்துக் கிடக்கிற மன்னனைப் பார்த்து அவன்
நிலை காண வரும்படிமகனை அழைத்துப் புலம்பகிறாள் கோசலை.    33

வசிட்டன் வருதல்  

1639.இவ்வாறு அழுவாள் இரியல்
குரல் சென்று இசையாமுன்னம்,