பக்கம் எண் :

2அயோத்தியா காண்டம்

ஆன்மாவின் பண்பாய் வெளிப்பட்டு நிற்கும் அறிவு. இறைவன்
பொருள்களுக்குஉள்ளே உடம்புக்குள் உயிர் இருப்பது போலவும், வெளியே
உயிரில் உணர்வு வெளிப்பட்டு இருப்பதுபோலவும் இருக்கிறான் என்பார்
‘ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப’
என்றார். பரம்பொருள் உயிர்களைத் தனக்கு உடம்பாகக் கொண்டு தான்
உள்ளேயும், உயிர்களுக்குஉடம்பாக அமைந்து தான் புறத்தேயும் உள்ளான்
என்பது சமய நூற் கொள்கையாதலின் இவ்வாறுகூறினார் என்க.

     எங்கும் - முற்றும்மை. ஊன், கூன், கொடுமை, கோல், கழல், வேந்து -
ஆகுபெயர்கள்.