‘வன் கேகயர் கோன் மங்கை துயரம் தன்னைத் துறந்தாள் -வலிய கேகய நாட்டு அரசன் மகளாகிய கைகேயியோ துன்பம் இல்லாமல் இருக்கிறாள்; இவளேதுறவாது ஒளிவாள் - இக்கோசலையோ துன்பத்தால் விடாமல் அழுகிறாள்; பிறந்தார்பெயரும் தன்மை - உலகத்துப் பிறந்தவர்கள் நிலை வேறுபடுகின்ற இயல்பு; பிறரால்அறிதற்கு எளிதோ?- மற்றொருவரால் அறியக் கூடியதோ (இல்லை என்றபடி). கைகேயி துன்பமற்றிருப்பதால் அவள் மனம் மாறியபடி கண்டு வசிட்டன் இவ்வாறு கூறினான்என்க. அரசன் பிரக்ஞை இழந்திருப்பதும், இனி நிச்சயம் இறந்து படுவான் என்பதும் உணர்ந்தவசிட்டன், அவ்விடத்தே கைகேயி துக்கமின்றி இருப்பதும், கோசலை வருந்திப் புலம்புவதும்கண்டு கைகேயி இந்நிலைக்குக் காரணமாயிருந்தல் வேண்டும் என உய்த்துணர்ந்து உலகிற்பிறந்தார் மனம் வேறுபடல் யாராலும் அறியமுடியாது. நேற்றுவரை மன்னன்பால் பெருங்காதலுடையகைகேயி இன்று அவன் மூர்ச்சிக்கவும் வருந்தாதுள்ளபடியால் யாருடைய மனம் எப்போது எப்படிமாறுபடும் என்பதை அறிய இயலாது என்று கருதி மேலும் கைகேயியை வினாவச் செல்கிறான் என்று அடுத்தசெய்யுளில் தொடருமி. அறுபதினாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்திய மன்னவன் இறந்துபடும்நிலை கிட்டியது கண்டு ‘பிறந்தார் பெயருந்தன்மை பிறரால் அறிதற்கெளிதோ’ என்றான் எனலும்ஆம். இங்கே பிறந்தார் பெயர்தல் என்பது பிறந்தவர் இறத்தலாம். 35 கைகேயி வசிட்டனிடம் நிகழ்ந்தவை கூறல் | 1641. | என்னா உன்னா, முனிவன், ‘இடரால் அழிவாள் துயரம் சொன்னாள் ஆகாள்’ என, முன் தொழு கேகயர்கோன் மகளை, ‘அன்னாய்! உரையாய்; அரசன் அயர்வான் நிலை என்?’ என்ன, தன்னால் நிகழ்ந்த தன்மை தானே தெரியச் சொன்னாள். | முனிவன் என்னா உன்னா - வசிட்டன் இவ்வாறு கருதி; ‘இடரால் அழிவாள்துயரம் சொன்னாள் ஆகாள்’ என - துன்பத்தால் வருந்துபவளாகிய கோசலை துயர்க்குரியகாரணத்தைச் சொல்லுதற்கு இயலாள் எனக் கருதி; முன் தொழு கேகயர் கோன் மகளை -தன்னை முன்வந்து வணங்குகின்ற கைகேயியை; ‘அன்னாய்! - தாயே; அயர்வான் அரசன்நிலை என்? உரையாய்’ என்ன - மூர்ச்சித்துச் சோர்ந்துள்ள வனாகிய சக்கரவ்ர்த்தியின்நிலைக்குக் காரணம் என்ன, சொல்வாயாக என்று கேட்க; தன்னால் நிகழ்ந்த எல்லாம் தானேதெரியச் சொன்னாள் - (அவள்) தன்னால் உண்டாகிய செயல்கள் எல்லாவற்றையும் தானே (முனிவனுக்கு) நன்கு விளங்கும்படி சொன்னாள். |