பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 201

     கோசலையால் சொல்ல இயலாது என்று கருதி, துயரற்றவளாக உள்ள
கைகேயியை வினாவினான்வசிட்டன் என்க. அரசனது நிலைக்குக் காரணம்
கைகேயியாக இருக்கலாம் என்னும் ஐயம் முனிவனுக்குஇருக்கலாம் அன்றி
அவள்தான் என்னும் உறுதி  முன் இல்லாமையால் அறிந்து வினாவினான்
ஆகாமைஅறிக.                                              36

வசிட்டன் மன்னனைத் தெளிவித்தல்  

1642. சொற்றாள், சொல்லாமுன்னம்,
     சுடர் வாள் அரசர்க்கு அரசை,
பொன் - தாமரை போல் கையால்,
     பொடி சூழ் படிநின்று எழுவி,
‘கற்றாய், அயரேல்; அவளே
     தரும், நின் காதற்கு அரசசை;
எற்றே செயல் இன்று ஒழி நீ
     என்று என்று இரவாநின்றான்.

     சொற்றாள் - (கைகேயி) சொன்னாள்;  சொல்லாமுன்னம் - அவள்
சொல்லிய அளவிலே (வசிட்டன்); சுடர்வாள் அரசர்க்கு அரசை - ஒளி
பொருந்திய வாளைஉடைய சக்கரவர்த்தியை; பொன் தாமரை போல்
கையால் -
தன்னுடைய பொற்கமலம் போன்றகைகளால்; பொடி சூழ் படி
நின்ற எழுவி -
புழுதி சூழப்பெற்ற மண்ணிலிருந்து  தூக்கி;  ‘கற்றாய்!
அயரேல் -
எண்ணில் பல்நூல் ஆய்ந்து கடந்த அறிவாளனே,
சோர்வடையாதே;  அவளே நின் காதற்கு அரசைத் தரும் - அந்தக்
கைகேயியை நின் அன்பு மகனாகிய இராமனுக்குஅரசாட்சியைத் தருவாள்;
செயல் எற்று? - வருந்தும் செயல் எத்தன்மைத்து; நீ இன்றுஒழி’ - நீ
இவ்வருத்தத்தை இப்பொழுதே ஒழிப்பாயாக;  என்று என்று இரவா
நின்றான் -
என்று பலமுறை சொல்லி வேண்டி நின்றான்.

     துன்பம் வந்துழி வருந்தல் கற்றோர்க்கு அழகன்று என்பதால் ‘கற்றாய்!
அயரேல்’என்றான். காதலுக்கு (அன்புக்கு) உரியவனைக் ‘காதல்’ என்றே
குறித்த ஆகுபெயர் நயம்உணர்க.                                37

1643.சீதப் பனி நீர் அளவி,
     திண் கால் உக்கம் மென் கால்
போதத்து அளவே தவழ்வித்து,
     இன்சொல் புகலாநின்றான்;
ஓதக் கடல் நஞ்சு அனையாள்
     உரை நஞ்சு ஒருவாறு அவிய,
காதல் புதல்வன் வெயரே
     புகல்வான் உயிரும் கண்டான்