(இவ்வாறு வேண்டி மேலும்) சீதப் பனிநீர் அளவி - குளிர்ச்சியை உடைய பனிநீரைக்கலந்து; திண்கால் உக்கம் - வலிய கைப்பிடி உடைய விசிறியினது; மென்கால் -மெல்லிய காற்றை; போதத்து அளவே தவழ்வித்து - மூர்ச்சை தெளிந்து அறிவுண்டாகும்அளவில் நிகழச் செய்து; இன்சொல் புகலாநின்றான் - இனிய சொற்களைச்சொல்லுகின்றவன்; ஒதக் கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒரு வாறு அவிய - கடலின்கண்எழுந்த விடம் போன்ற கைகேயியின் வரம் என்னும் வார்த்தையாகிய விடம் ஓரளவுக்கு நீங்க; காதற் புதல்வன் - அன்பு மகனாகிய இராமனது; பெயரே புகல்வான் - பெயரையேசொல்லிக் கொண்டிருக்கும் தயரதனது; உயிரும் கண்டான் - உயிரையும் பார்த்தான். முனிவன் மென்காற்று வீசி, இன்சொல், கூறி, சோகம், தணிவிக்க, சற்றே மூர்ச்சைதெளிந்து ‘இராமா, இராமா’ என்று பிதற்றுகின்ற தயரதனுக்கு உயிர்ப்பு நிலை வந்தது; அதுகண்டான் என்பதாம். 38 | 1644. | காணா, ‘ஐயா! இனி, நீ ஒழிவாய் கழி பேர் அவலம்; ஆண் நாயகனே, இனி, நாடு ஆள்வான்; இடையூறு உளதோ? மாணா உரையாள், தானே தரும்; மா மழையே அனையான் பூணாது ஒழிவான் எனின், யாம் உளமோ? பொன்றேல்’ என்றான். |
காணா - அரசன் மூர்ச்சை தெளிந்தது கன்டு; ‘ஐயா! - ஐயனே; நீ இனிகழிபோர் அவலம் ஒழிவாய் - நீ இனிமேல் இம்மிகப் பெரிய துன்பத்தை நீக்கிக்கொள்வாயாக; ஆண் நாயகனே இனி நாடு ஆள்வான் - புருஷோத்தமனாகிய இராமனே இனிஇந்நாட்டை ஆட்சி செய்வான்; இடையூறு உளதோ? - அதற்கு வேறு இடையூறு ஏதேனும் இருக்கின்றதா, இல்லை; மாணா உரையாள் - மாட்சியை இல்லாத வார்த்தையாகியவரத்தைக் கேட்ட கைகேயியானவள்; தானே தரும் - (அரசைத்) தானே இராமனக்குத்திருப்பித் தருவாள்; மாமழையே அனையான் - பெரிய மேகத்தை ஒத்தவனாகிய இராமன்; பூணாது ஒழிவான் எனின் - அரசை மீண்டும் மேற் கொள்ளாது போவானாயின்; யாம் உளமோ?- நாங்களும் இருக்கப் போகிறோமா; பொன்றேல்! - மனம் அழியாதே; என்றான் - தன் சொற்கேட்டுக் கைகேயி மறுக்க மாட்டாள் என்னும் துணிபுபற்றி வசிட்டன் ‘ஆண்நாயகனே இனி நாடு ஆள்வான்’ என்றான். ‘ஏ’ காரம் தேற்றம். கைகேயி தந்துவிடுவாள்,ஒருவேளை இராமன் ஏற்காது போனால் |