பக்கம் எண் :

204அயோத்தியா காண்டம்

     முனியும் - வசிட்ட முனிவனும்; முனியும் செய்கைக் கொடியாள் -
வெறுக்கும்செயலைச் செய்த கொடியவளாகிய கைகேயியின்;  முகமே
முன்னி -
முகத்தை நோக்கி;  ‘பொன்னே! - பொன்னெனச் சிறந்தவளே;
இனி - இப்பொழுது;  உன் புதல்வற்குஅரசும் - உன் மகனாகிய
இராமனுக்கு அரசாட்சியையும்; எனையோர் உயிர்க்கு உயிரும் -
மற்றவர்களது  உயிர்க்கு உயிர்ப்பையும்;  மனுவின் வழி நின் கணவற்கு
உயிரும் -
வைவஸ்வத மனுவின் வமிசத்திற் பிறந்த உன்னுடைய நாயகனான
தசரதனுக்கு உயிரையும்;  உதவி -கொடுத்து;  வசை தீர் -பழிநீங்கிய;
புனிதம் மருவும் - தூய்மை பொருந்திய; புகழே புனையாய்! - புகழை
அணிகலனாக அணிந்து  கொள்வாய்;  என்றான் -

     இராமனுக்கு அரசு கொடுத்தாலன்றி  ஏனைய எதுவும் நிலை பெறாது
ஆகையால் அதனை முதலிற்கூறினான். இராமனைக் கான் ஏகாது  தடுத்தல்
நோக்கம் ஆயினும் இராமன் கான் ஏகாமல்அரண்மனையில்  இருந்தால்
அவனே அரசேற்க  உரியவன் ஆதலின் ‘அரச உதவி’ என்றான். இராமனை
‘உன்புதல்வன்’ என்ற கைகேயி கூற்றும்,  “தாய் கையில் வளர்ந்திலன்
வளர்த்தது  தவத்தால்கேகயன் மடந்தை”  என்ற நகர மக்கள் கூற்றும்
(1453, 1591) உறுதிப் படுத்தல்அறிக.                               41

1647. மொய்ம் மாண் வினை வேர் அற வென்று
     உயர்வான் மொழியாமுன்னம்
விம்மா அழுவாள், ‘அரசன்
     மெய்யின் திரிவான் என்னில்,
இம் மாண் உலகத்து உயிரோடு
     இனி வாழ்வு உகவேன்; என் சொல்
பொய்ம் மாணாமற்கு, இன்றே,
     பொன்றாது ஒழியேன்’ என்றாள்.

     மொய்ம்  மாண் வினை வேர் அற வென்று உயர்வான் -
நெருங்கிய ஆற்றல் அமைந்தவினைகளை அடியோடு போம்படி வெற்றி
கொண்டு தவத்தால் உயர்ந்த வசிட்டன்;  மொழியாமுன்னம் -
சொல்லிய
அளவில் (கைகேயி);  விம்மா அழுவாள் - விம்மி அமுது;  ‘அரசன்
மெய்யின் திரிவான் என்னின் -
சக்கரவர்த்திதான் கொடுத்தவரமாகிய
சத்தியத்திலிருந்து மாறுபடுவானாயின்; இம் மாண் உளகத்து  உயிரோடு
இனி வாழ்வு உகவேன் -
இந்தப் பெருமை பொருந்திய உலகத்தில்
உயிரோடு இனிமேல் வாழ்தலை விரும்பமாட்டேன்; என்சொல் பொய்ம்
மாணாமற்கு
- என் வார்த்தை பொய்யாகாமைக்காக; இன்றே-இன்றைக்கே;
பொன்றாது ஒழியேன் - இறந்து படாமல் இருக்க மாட்டேன்; என்றாள்-.