பக்கம் எண் :

210அயோத்தியா காண்டம்

- தசரதனின் கண்ணை ஒத்த இராமன்; பிரியக் கண்ட துயரம்- தன்னைப்
பிரியஅதனால் தயரதன்பால் ஏற்பட்ட துன்பத்தை; கண்டே -  பார்த்து;
தவிர்வாள் -(இராமனைக் கான் ஏகாதபடி தயரதன்பால் சொல்லித் தடுக்க
வேண்டும்  என்று எண்ணி வந்தகருத்தை) ஒழிவாளானாள்;  தளர்வான்
நிலையில் தளர்வாள் -
சோர்கின்ற தயரதனைப்போலவே அவளும்
சோர்வாளானாள்.

     தந்தையைப் பார்த்துச் சொல்லிவிட்டுக் காடு ஏகுவதாயின் முடியாது.
அச்செயல் இடையூறுபடும்என்று  கருதி  இராமன் தயரதனைப் பார்த்துச்
சொல்லிக்கொள்ளாமல்  சென்றான் என்பதுபற்றி ‘இடையூறு  உடையான்'
என்றார். இராமனைக் கான் ஏகாது தடுக்கும் தன்மை தயரதன்பால் இல்லை
என்பதும், கைகேயி மாட்டே அது உள்ளது என்பதும் நிகழ்வுகளின் மூலம்
அறிந்தாள் ஆதலின்வந்த கருத்தை  ஒழித்துத் தயரதன்  போலவே
அவளும்  தளர்வாளானாள். 1632 ஆம் பாடல்காண்க.               50

1656. மாற்றாள் செயல் ஆம் என்றும்,
     கணவன் வரம் ஈந்து உள்ளம்
ஆற்றாது அயர்ந்தான் என்றும்,
     அறிந்தாள்; அவளும், அவனைத்
தேற்றா நின்றாள்; மகனைத்
     திரிவான் என்றாள்; ‘அரசன்
தோற்றான் மெய்' என்று, உலகம்
     சொல்லும் பழிக்கும் சோர்வாள்.

     மாற்றாள் செயல் ஆம் என்றும்- (இது) மாற்றாளாகிய கைகேயியின்
செயலாகும் என்றும்; கணவன் வரம் ஈந்து  உள்ளம் ஆற்றாது
அயர்ந்தான் என்றும் -
கணவனாய தயரதன்கைகேயிக்கு வரம் கொடுத்து
அதனால் மனம் பொறுக்கமாட்டாமல்  சோர்வடைந்தான் என்றும்;
அறிந்தாள் - அறிந்துகொண்ட;  அவளும் - கோசலையும்;  அவனைத்
தேற்றாநின்றாள் -
தசரதனைத் தெளிவித்த வண்ணமிருந்தாள்; மகனைத்
திரிவான்என்றாள் -
தன் மகனாகிய இராமனைப் பற்றி அவன்
காட்டகத்தே திரிவான் (வேறு வழிஇல்லை)எனத் தன்னுள் சொல்லிக்
கொள்வாள்;  ‘அரசன் மெய் தோற்றான்' என்று - தசரதன்சத்தியத்தில்
தவறினான் என்று; உலகம் சொல்லும் பழிக்கும் சோர்வாள் - உலகத்தார்
சொல்லும் பழிச்சொல் கருதியும் மனம் சோர்கின்றவளானாள்.

     மகனைக் காட்டுக்குப் போக வரம் ஈந்து  மன்னன் இறந்துபடும்
நிலையில் வருந்துகிறான். மகனைக் காட்டுக்குச் செல்ல வேண்டாம்
என்றாலோ மன்னன் சத்தியம்தவறினான் என்று உலகம் பழி சொல்லும்;
என்கின்ற அறச் சங்கடத்தில் அகப்பட்டுத்தவிக்கிறாள் கோசலை
என்றவாறாம்.

1657.‘தள்ளா நிலை சால் மெய்ம்மை
     தழுவா வழுவாவகை நின்று,