மாறிச் சோர்வாள்; ‘மகனைக் காவாய்' என்னாள் - வனம் போகாமல் இருந்து தந்தையின் உயிரைக் காப்பாற்றுவாய் என்று மகனைப் பார்த்துச் சொல்லமாட்டாள்; கணவன்புகழுக்கு அழிவாள் - தயரதனது புகழுக்குக் கேடு வருமோ என்று மனம் வருந்துவாள்; ஆ! ஆ!- ; உயர் கோசலை ஆம் அன்னம் - உயர்ந்த கோசலையாகிய அன்னம் போல்வாள்; என் உற்றனள் - என்ன துன்பப்பட்டாள். மகனைத் தடுத்தால் கணவன் புகழுக்கு அழிவு, மகனைத் தடுக்காது விட்டால் கணவன் உயிர்க்குஅழிவு. இரண்டில் எதனையும் செய்ய இயலாது உள்ளம் தடுமாறினாள். ஆ! ஆ! இரக்கக் குறிப்பு.அந்தோ, ஐயகோ என்னும் பொருளது. 53 தயரதன் புலம்பல் | 1659. | உணர்வான், அனையாள் உரையால், ‘உயர்ந்தான் உரைசால் குமரன் புணரான் நிலமே, வனமே போவானே ஆம்' என்னா; - இணர் ஆர்தரு தார் அரசன் - இடரால் அயர்வான்; ‘வினையேன் துணைவா! துணைவா' என்றான்; ‘தோன்றால், தோன்றாய்!' என்றான். |
இணர் ஆர்தரு தார் அரசன்- பூங்கொத்துகள் பொருந்திய மாலை அணிந்த தயரதமன்னன்; அனையாள் உரையால்- அந்தக் கோசலையின் வார்த்தையால்; ‘உயர்ந்தான் உரைசால் குமரன் - உயர்ந்தவனாகிய புகழ் பெற்ற இராமன்; நிலமேபுணரான் - நிலத்தை ஆள மாட்டான்; வனமே போவானே ஆம்! - காட்டிற்குப்போபவனே ஆவான்; என்னா - எனக் கருதி; இடரால் அயர்வான் - துன்பத்தால் சோர்கின்றவன்; ‘வினையேன் துணைவா! துணைவா' என்றான் - தீவினையேனாகிய என்னுடைய தோழனே தோழனே என்றான்; ‘தோன்றால்! தோன்றாய் - மகனே என்முன் வருவாயாக; என்றான் -. ‘துணைவா துணைவா' புலம்பலில் வந்த அடுக்கு. 54 | 1660. | ‘கண்ணும் நீராய், உயிரும் ஒழுக, கழியாநின்றேன்; எண்ணும் நீர் நான்மறையோர், எரிமுன் நின்மேல் சொரிய, மண்ணும் நீராய் வந்த புனலை, மகனே! வினையேற்கு |
|