பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 213

  உண்ணும் நீராய் உதவி,
     உயர் கான் அடைவாய்!' என்றான்.

     ‘மகனே! - இராமனே;  கண்ணும்  நீராய் - கண்கள் இரண்டும்
நீராகி; உயிரும் ஒழுக - உயிரும் உடலை விட்டு வெளியில் செல்ல;
கழியாநின்றேன் -இறந்துகொண்டுள்ளேன்; வினையேற்கு - இப்படித்
தீவினையுடைய எனக்கு; எண்ணும் நீர்நான் மறையோர் - மதிக்கப்படும்
தன்மையுடைய வேதம் வல்ல அந்தணர்; எரி முன்நின்மேல் சொரிய -
மூடிசூட்டு விழாவிற்கு முன்னர் உண்டாக்கப்பட்ட வேள்வித்தீயின் முன்னால்
உன்மேல் அபிடேகம் செய்யவேண்டி;  மண்ணும் நீராய் வந்த புனலை -
அபிடேகசுத்த நீராக வந்த தீர்த்த நீரை;  (இனி அதற்குத் தேவை
இன்மையால்) உண்ணும் நீராய்உதவி - நான் இறந்த பிறகு எனக்குச்
செய்யப்பெறும் பிரேத தாகசாந்தி நீராகக் கொடுத்து (பிறகு);  உயர்கான்
அடைவாய்' -
  உயர்ந்த காட்டை  அடைவாயாக;  என்றான்-

     முடிபுனைந்து நீராட்டப் புண்ணிய தீர்த்தங்கள் கொண்டுவருவர். அது
‘மண்ணு மங்கலம்' எனப்படும். அதுவே ‘மண்ணும் நீர்'  எனப்பட்டது.
இறந்த பின் பத்து  நாளும்  வளர்ந்துஎழுகின்ற  பிரேத பூதத்துக்குத்
தாகசாந்தி  செய்ய நித்தியவதி என்னும் பெயரால் நீர்க்கடன்இறுத்தல்
மகனது  கடன்;  ஆதலால் அதனைத் தயரதன் இராமனைச் செய்ய
வேண்டினான்.                                                55

1661. ‘படைமாண் அரசைப் பல கால்
     பழுவாய் மழுவால் எறிவான்,
மிடை மா வலி தான் அனையான்,
     வில்லால் அடுமா வல்லாய்!
"உடைமா மகுடம் புனை" என்று
     உரையா, உடனே கொடியேன்
சடை மா மகுடம் புனையத்
     தந்தேன்; அந்தோ!" என்றான்.

     படைமாண் அரசை - சேனைகளினது மாட்சிமையுடைய அரசர்களை;
பல கால் -
இருபத்தொரு தலைமுறை;  பழுவாய் மழுவால் - பழுக்கக்
காய்ச்சிக் கூர்மையாக்கப்பட்டமழுப்படையால்;  எறிவான் - வெட்டி
அழித்தவனும்;  மிடை  மா வலி தான் அனையான் -செருக்கிய மிக்க
பலத்தில் தன்னைத் தானே ஒத்தவனும் ஆகிய பரசுராமனை; வில்லால்
அடுமாவல்லாய்! -
வில்லாலே வெல்லும் ஆற்றல் வல்லவனே; (உன்னை)
‘உடைமா மகுடம் புனை' என்று உரையா - உன்னுடைய  பெரிய
முடியைச் சூடிக்கொள் என்று சொல்லி; உடனே-அப்பொழுதே; சடை மா
மகுடம் புனையத் தந்தேன் அந்தோ' -
சடையாகிய  பெரியமகுடத்தை
அணிந்துகொள்ளும்படி  தந்துவிட்டேனே  ஐயகோ;  என்றான்-