‘நிருபர்க்கு ஒரு பழிபற்றிட (1275) என்ற பரசுராமப் படலப்பாடலில், ‘இருபத்தொரு படிகால்' என்று இந்நிகழ்ச்சி கூறப்பெறுதல் அறிக. ‘இருபத்தொருகால்அரசு களைகட்ட பரசுராமன், மேவரும் சாந்திமத்தீ வரண் கருதி இருத்தி்ய செம்பொன் திருத்தகுமுடியும்' என்னும் முதலாம் இராசேந்திரன் மெய்க்கீர்த்தியும் இதனைக் கூறும். அடுமா -அடுமாறு. 56 | 1662. | "கறுத்தாய் உருவம்; மனமும் கண்ணும் கையும் செய்யாய்; பொறுத்தாய் பொறையே; இறைவன், புரம் மூன்று எரித்த, போர் வில் இறுத்தாய்; "தமியேன்" என்னாது, என்னை இம் மூப்பிடையே வெறுத்தாய்; இனி, நான் வாழ்நாள் வேண்டேன்! வேண்டேன்! என்றான். |
‘உருவம் கறுத்தாய்! - திருமேனி கறுத்திருப்பவனே; மனமும் கண்ணும் கையும்செய்யாய்! - உள்ளமும் கண்ணும் கையும் செம்மையாக இருப்பவனே; பொறையேபொறுத்தாய்! - பொறுமையையே தரித்திருப்பவனே; இறைவன் - சிவபிரான்; மூன்று புரம் எரித்த போர்வில் இறுத்தாய்! - முப்புரங்களை எரித்த காலத்துப் பிடித்த போர்க்குரிய வில்லை (சீதா கல்யாணத்துக்கு முன்) ஒடித்தவனே; ‘தமியேன்' என்னாது -தனித்துத் துணையின்றி உள்ளேன் என்ற கருதாது; என்னை இம் மூப்பிடையே வெறுத்தாய் - என்னை இம்முதுமைக் காலத்தில் வெறுத்திட்டாய்; இனி நான் வாழ்நாள் வேண்டேன்வேண்டேன்' - இனிமேல் நான் வாழும் நாளை விரும்பமாட்டேன்; என்றான் - . இராமன் சிறப்புகளை எல்லாம் நினைந்து நைந்துருகுகிறான் தயரதன். ‘வேண்டேன், வேண்டேன்'புலம்பலில் வந்த அடுக்கு. உள்ளத்துக்குச் செம்மை கோட்ட மின்மையாம். மற்றவைநிறம். 57 | 1663. | ‘பொன்னின் முன்னம் ஒளிரும் பொன்னே! புகழின் புகழே! மின்னின் மின்னும் வரிவில் குமரா! மெய்யின் மெய்யே! என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு, எளியேன் அல்லேன்; உன்னின் முன்னம் புகுவேன், உயர் வானகம், யான்' என்றான். |
|