பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 215

     ‘பொன்னின் முன்னம் ஒளிரும் பொன்னே! - பொன்னுக்கு
மேற்பட்டுப்பிரகாசிக்கின்ற பொன் போன்றவனே;  புகழின் புகழே! -
புகழுக்குப் புகழானவனே!; மின்னில் மின்னும் வரிவில் குமரா! - மின்னலைப் போல் விட்டு விளங்கும் கட்டமைந்தவில்லை உடைய
குமரனே; மெய்யின் மெய்யே! - உண்மையின் நிலைபேறே; என்னின்
முன்னம் -
எனக்கு முற்பட்டு; நீ வனம் அடைதற்கு- நீ காடு புகுவதற்கு;
யான்எளியேன் அல்லேன் - நான் எளிமை உடையவன் அல்லன்;
உன்னின் முன்னம் -
உனக்குமுன்னால்;  உயர் வானகம் புகுவேன்!-
உயர்ந்த விண்ணை அடைவேன்;'  என்றான்-.

     ‘கானகமே மிக விரும்பி  நீ துறந்த வள நகரைத் துறந்து  நானும்,
வானகமே மிக விரும்பிப்போகின்றேன்.  மனுகுலத்தார் தங்கள் கோவே'
என்ற (திவ்ய.738)  குலசேகராழ்வார் பாசுரமும்காண்க.               58

1664.‘நெகுதற்கு ஒத்த நெஞ்சும்,
     நேயத்தாலே ஆவி
உகுதற்கு ஒத்த உடலும்,
     உடையேன்; உன்போல் அல்லேன்;
தகுதற்கு ஒத்த சனகன்
     தையல் கையைப் பற்றிப்
புகுதக் கண்ட கண்ணால்,
     போகக் காணேன்' என்றான்.

     ‘நெகுதற்கு ஒத்த நெஞ்சும் - உருகுதற்குப் பொருந்திய மனமும்;
நேயத்தாலே-அன்பினால்; ஆவி உகுதற்கு ஒத்த உடலும் உடையேன்-
உயிர் விடுதற்குப் பொருந்தியஉடலையும் உடையவன் யான்;  உன்போல்
அல்லேன் -
உன்னைப்போல் வன்மனமும், வலியஉடலும்
உடையேனல்லேன்;  தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையைப் பற்றி -
தகுதிக்கு ஒத்தசனக ராசனுக்கு மகளாகிய சானகியின் கையைப் பிடித்துக்
கொண்டு;  புகுதக் கண்ட கண்ணால் -அயோத்தி நகருக்குள் (நீ)
புகுவதைப் பார்த்த கண்களால்; போகக் காணேன்'-(அயோத்தியைவிட்டுக்)
காடு செல்வதைக் காண மாட்டேன்;'  என்றான்-.

     ‘ஏ'  காரம் அசை.  தன் நிலை இவ்வாறாகவும்  இராமன் வனமேத்
துணிந்தமை பற்றி‘உன்போல் அல்லேன்'  என்று அவனை வன் மனமும்
வல் உடலும் உடையவனாகக் குறித்தான்தயரதன்.                   59

1665.‘எற்றே பகர்வேன், இனி, யான்?
     என்னே! உன்னின் பிரிய
வற்றே உலகம் எனினும்,
     வானே வருந்தாது எனினும்,