பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 217

1667.‘ஒலி ஆர் கடல் சூழ் உலகத்து,
     உயர் வானிடை, நாகரினும்,
பொலியா நின்றார் உன்னைப்
     போல்வார் உளரோ? பொன்னே!
வலி யார் உடையார்?' என்றான்;
     ‘மழுவாள் உடையான் வரவும்
சலியா நிலையாய் என்றால்,
     தவிர்வார் உளரோ' என்றான்.

     ‘பொன்னே! - பொன் போலச் சிறந்தவனே;  ஒலிஆர்  கடல்சூழ்
உலகத்து -
ஒலிக்கின்ற கடலாற் சூழப்பெற்ற இப்பூமியில்; உயர் வானிடை-
உயர்ந்தவிண்ணுலகத்தில்; நாகரினும் - நாகலோகமாகிய பாதலத்திடத்தும்;
பொலியாநின்றார் - சிறந்து  நின்றவர்கள்;  உன்னைப் போல்வார்
உளரோ? -
உன்னைஒத்தவர்கள் வேறு இருக்கின்றார்களோ?; ‘வலி
உடையார் யார்' என்றான்
- வலிமைஉடையவர்கள் யார் உளர் என்று
சொல்லி;  மழுவாள் உடையான் வரவும் - மழுப்படைஉடைய பரசுராமன்
வரவும்;  (அது கண்டு) சலியா நிலையாய் - (சிறிதும்) தளராத நிலை
உடையவனாய் இருந்தாய்; என்றால்-; தவிர்வார் உளரோ? - (நீ ஒன்று
செய்தால்)உன்னைச் செய்யாதே என்று தடுப்பார் இருக்கின்றார்களா;’
என்றான்-.

     மிக்க வலியுடையவர்கள் தம் விருப்பம்போலச் செய்ய இயலும்.
அவர்களைத் தடுக்க வல்லவர்யாரும் இலர். ஆதலின், என் நிலை கருதி
‘இராமா! நீ வனம் போகாதிருப்பின் உன்னை யாரால்தடுக்க முடியும்'
என்று  குறிப்பால் வினாவிப் புலம்பினன் தயரதன்.                  62

1668.‘கேட்டே இருந்தேன் எனினும்,
     கிளர் வான் இன்றே அடைய
மாட்டேன் ஆகில் அன்றோ,
     வன்கண் என்கண்? மைந்தா!
காட்டே உறைவாய் நீ! இக்
     கைகேசியையும் கண்டு, இந்
நாட்டே உறைவேன் என்றால்,
     நன்று என் நன்மை!' என்றான்.

     ‘மைந்தா! - இராமா!; கேட்டு இருந்தேன் எனினும் - நீ காட்டுக்குச்
செல்வதைக் கேட்டுவைத்தும் இங்கிருந்தேன் ஆனாலும்;  கிளர்வான் -
ஒளிபடைத்தவானுலகத்தை; இன்றே அடையமாட்டேன் ஆகில்
அன்றோ -
இன்றைக்கே சென்று சேராமல்இருந்தால் அல்லவா; என்கண்
வன்கண் -
என்னிடம் கொடுமைத்தன்மை உள