கிறைவன்’ எனப்பட்டான் என்பது ஏற்குமேல் கொள்க. 113 1719. | சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை புடை தோன்ற ஆர்த்து, வில் தாங்கி, வாளிப் பெரும் புட்டில் புறத்து வீக்கி, பற்று ஆர்ந்த செம் பொன் கவசம், பனி மேரு ஆங்கு ஓர் புற்று ஆம் என ஓங்கிய தோளொடு, மார்பு போர்க்க. |
சுற்று ஆர்ந்த கச்சில்- இடையைச் சுற்றி அமைந்த இடைக்கச்சிலே; கரிகை -வாளை; புடை தோன்ற ஆர்த்து - வெளியில் தெரியும்படி கட்டி; வில் தாங்கி -வில்லைச் சுமந்து; வாளிப் பெரும்புட்டில் புறத்து வீக்கி - அம்புகள் அமைந்த பெரியதூணியை முதுகுப்புறத்தில் கட்டியமைத்து; பற்று ஆர்ந்த செம்பொன் கவசம் - நன்றாகப்பிடிப்புப் பொருந்திய செம்பொன்னாலாகிய கவசம்; பனிமேரு ஆங்கு ஓர் புற்று ஆம் என -குளிர்ந்த மேரு மலை ஒரு புற்று ஆகும் என்று சொல்லும்படி; ஓங்கிய தோளொடு -உயர்ந்துள்ள தோளோடு; மார்பு போர்க்க - மார்பையும் மூடிக்கொள்ள. இடுப்பைச் சுற்றியுள்ள கச்சில் வாளைச் செருகுதல் இயல்பு. தோளின் பெருமை நோக்கமேருமலை ஒரு புற்றுப் போலத் தோன்றும் என்றார். 114 1720. | அடியில் சுடர் பொன் கழல் ஆர்கலி நாண ஆர்ப்ப பிடியில் தடவும் சிலை நாண் பெரும் பூசல் ஓசை, இடியின் தொடர, கடல் ஏழும் மடுத்து, இஞ் ஞால முடிவில் குமுறும் மழை மும்மையின்மேல் முழங்க, |
அடியில் சுடர் பொன் கழல் ஆர்கலி நாண ஆர்ப்ப - பாதங்களில் ஓளிவீசும்பொன்னால் ஆகிய வீரக்கழலை கடல் வெட்கமுறும் படி பேரொலி செய்ய; பிடியில் தடவும் -கைப்பிடியால் தடவப் பெறுகின்ற; சிலை நாண் பெரும் பூசல் ஓசை - வில்லினதுகயிற்றைத் தெறிப்பதால் உளதாகும் பெரிய ஆரவார ஒலி; இஞ்ஞால முடிவில் - இந்த உலக முடிவில்; கடல் ஏழும் மடுத்து - ஏழு கடல்களையும் குடித்து; இடியின் தொடர -இடிகளோடு தொடர்ந்து; குமுறும்- |