பக்கம் எண் :

250அயோத்தியா காண்டம்

முழங்குகின்ற; மழை - மழையைக்காட்டிலும்; மும்மையின் மேல் முழங்க-
மூன்று  மடங்கு அதிகமாக ஒலிக்க.

     வில்லில் நாண் ஏற்றிய பிறகு நாணின் இறுக்கத்தைச் சோதித்துத்
தெறிப்பர்;தெறிக்கும்போது  எழும் ஓசை பேரொலியாக உண்டாகும்.
அதை வருணிப்பது  கவிமரபு.                                  115

1721.வானும் நிலனும் முதல் ஈறு இல்
     வரம்பு இல் பூதம்
மேல்நின்று கீழ்காறும்
     விரிந்தன வீழ்வபோல,
தானும், தன தம்முனும் அல்லது,
     மும்மை ஞாலத்து
ஊனும் உயிரும் உடையார்கள்
     உளைந்து ஒதுங்க,

     தானும் தன தம்  முனும் அல்லது - இலக்குமணனும், அவனுக்குத்
தமையனாகிய இராமனும்அல்லாமல்; மும்மை  ஞாலத்து - மூன்று
உலகங்களிலும் உள்ள; ஊனும் உயிரும்உடையார்கள்- உடம்பும் உயிரும்
உடைய அனைவரும்; வானும் நிலனும் முதல் ஈறு இல் மேல்நின்று
கீழ்காறும் விரிந்தன -
வானும்,  நிலமும் முதலிய, அழிவற்ற, மேலிருந்து
கீழ்வரை விரிந்துள்ளனவாகிய; வரம்பில் பூதம் - கணக்கில்லாத பூதங்கள்;
வீழ்வ போல - விழுகின்றன போலக் கருதி;  உளைந்து  ஒதுங்க -
வருந்தி விலக.

     நிலம் நீர் தீ காற்று ஆகாயம் முதலிய ஐந்து  பெரும் பூதங்களும்
அழிவற்றவை. மேலிருந்துகீழ்வரை விரிந்துள்ளவை. அப்பூதங்கள்
விழுவனவாகக் கருதினர் அனைவரும் என்பதாம். ஐம்பூதங்களில் முதலதான
வானும் இறுதியதான நிலனும் கட்டி, ஐந்தையும்பெறவைத்தார். இலக்குவனது
சீற்ற ஆவேசம் அப்படி  இருந்தது  என்றார்.                      116

1722. ‘புவிப் பாவை பரம் கெட,
     போரில் வந்தோரை எல்லாம்
அவிப்பானும், அவித்து அவர்
     ஆக்கையை அண்டம் முற்றக்
குவிப்பானும், எனக்கு ஒரு
     கோவினைக் கொற்ற மௌலி
கவிப்பானும், நின்றேன்; இது
     காக்குநர் காமின்’ என்றான்.

     ‘புவிப் பாவை பரம் கெட - உலகம்  என்னும்  மகள்தன் சுமை