திருந்து; அண்ட கோளம் - உலக உருண்டை; கீற்று ஒத்து உடைய- கீறு கீறாகப் பிளவுபட்டுத் தரும்படி; படும் - உண்டாகிய; நாண் உரும் ஏற - நாணொலியாகிய இடியேற்றொலியை; கேளா - கேட்டு. இராமன் சுமித்திரை மாளிகை சென்றதை இப்படலத்து இருபத்தெட்டாம் பாடலிற் காண்க.கேளா - செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம். அது ‘வந்தான்’ என அடுத்த பாட்டில் முடியும். 120 1726. | வீறு ஆக்கிய பொற் கலன் வில்லிட, ஆரம் மின்ன, மாறாத் தனிச் சொல் துளி மாரி வழங்கி வந்தான்- கால் தாக்க நிமிர்ந்து, புகைந்து கனன்று, பொங்கும் ஆறாக் கனல் ஆற்றும் ஒர் அஞ்சன மேகம் என்ன. |
வீறு ஆக்கிய பொன் கலன் வில்லிட - அழகிற் சிறந்த பொன்னால் ஆகிய அணிகலன்ஒளி வீச; ஆரம் மின்ன - (மார்பில்) முத்துவடம் ஒளிவிட்டு விளங்க; கால்தாக்க - புயற்காற்று வீச; நிமிர்ந்து - மேல்நோக்கி; புகைந்து - புகைபொங்கி; கனன்று - எரிந்து; பொங்கும் - மேலும் மிகுகின்ற; ஆறாக்கனல் - அணையாத நெருப்பை; ஆற்றும் - அணைக்கின்ற; ஓர் அஞ்சன மேகம் என்ன- ஒரு மை போலும் கரிய மேகம் போல; மாறா - மாறுபடாத; தனிச் சொல் மாரித்துளி - ஒப்பற்ற சொல்லாகிய மழைத் துளியை; வழங்கி - சொல்லிக்கொண்டு; வந்தான்- நெருப்பு. இலக்குவன் சீற்றம். அது தணிக்குஞ் சொல் மழைத்துளி வழங்கும் அஞ்சன மேகம்இராமன் என உருவகம் கொள்க. 121 இராமன் இலக்குவனுடன் உரையாடுதல் 1727. | மின் ஒத்த சீற்றக் கனல் விட்டு விளங்க நின்ற, பொன் ஒத்த மேனிப் புயல் ஒத்த தடக் கையானை, ‘என் அத்த! என், நீ, இமையோரை முனிந்திலாதாய், சன்னத்தன் ஆகித் தனு ஏந்துதற்கு ஏது?’ என்றான். |
|