கனலின்- கொடு நெருப்புப் போல; சுடுவான் - எரித்திட; துணிந்தேன்- உறுதிசெய்தேன்.’ ‘நின் மேல் முறை’ - ‘உன் மேல் உள்ள மகன் என்கின்ற அன்பு முறைமையை’ என்றும்பொருள் உரைக்கலாம் - இது காறும் கைகேயியின் அன்பு மகன் என இராமன் வளர்ந்ததை அவனும்அறிவான் ஆதலின். ‘இமையோரை முனிந்திலாதாய்’ இன்று முனிவானேன் என்ற இராமன் வினாவிற்கு; தடை செய்குநர் தேவரேனும்’ என்பது இலக்குவன் உரைத்த பதில் எனக்கொள்ளின்; ‘இமையோரை’ என்னும் பாடம் வன்மை பெற இதுவும் ஒரு சான்றாகும். 123 1729. | ‘வலக் கார் முகம் என் கையது ஆக, அவ் வானுளோரும் விலக்கார்; வேர் வந்து விலக்கினும், என் கை வாளிக்கு இலக்கா எரிவித்து, உலகு எழினோடு ஏழும், மன்னர் குலக் காவலும், இன்று, உனக்கு யான் தரக் கோடி’ என்றான். |
‘வலக் கார்முகம் - வலிமை படைத்த வில்; என் கையது ஆக - என்கையின்கண் இருப்பதாக; அவ்வானுளோரும் - அந்தத் தேவர்களும்; விலக்கார் -என்னைத் துணிந்து தடுக்கமாட்டார்; அவர் வந்து விலக்கினும் - (ஒருவேளை) அவர் வந்து தடுத்தாலும்; என் கை வாளிக்கு- என் கையில் உள்ள அம்புக்கு; இலக்கா -குறியாகும்படி; எரிவித்து - (அவர்களை) எரியச் செய்து; உனக்கு -; உலகு ஏழினோடுஏழும் - பதினான்கு உலகங்களும்; மன்னர் குலக் காவலும் - அரசர் குலத்துக் காவல்தொழிலாகிய சக்கரவர்த்தியாம் தன்மையும்; இன்று - இப்பொழுதே; யான் தர- நான் கொடுக்க; கோடி’ - கொள்வாய்;’ என்றான்- கார்முகம் - வில். தசரதன் மன்னர் மன்னன் ஆதலின் ‘மன்னர் குலக் காவலும்’இராமனுக் குரியதாக்குவேன் என்றான் இலக்குவன். 124 இராமன் உரை 1730. | இளையான் இது கூற, இராமன், ‘இயைந்த நீதி வளையாவரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே? | |