பக்கம் எண் :

256அயோத்தியா காண்டம்

 உளையா அறம் வற்றிட,
     ஊழ் வழுவுற்ற சீற்றம்,
விளையாத நிலத்து, உனக்கு
     எங்ஙன் விளைந்தது?’ என்றான்.

     இளையான் - இலக்குவன்; இது கூற - இதனைச் சொல்ல; இராமன்-;
‘இயைந்த நீதி வளையாவரும் நல்நெறி நின் அறிவு ஆகும் அன்றே?
-
அரசர்க்குப் பொருந்தியநீதிக்குச்  சிறிதும் மாறுபடாத நல்ல வழியிற்
செல்லுவது  நின் அறிவாகும் அல்லவா;  ஊழ் வழுவுற்ற  சீற்றம் -
முறைமைக்கு மாறாக உள்ள கோபம்;  விளையாத நிலத்து -உண்டாகாத
உன் மனத்தில்;  அறம் உளையா வற்றிட -  தருமம் மனம் வருந்திக்
கெடும்படி;  உனக்கு விளைந்தது  எங்ஙன்? - உனக்கு  உண்டாகியது
எவ்வாறு; ’என்றான்-.

     விளையாத நிலத்து - உண்டாகாத குடும்பத்தில் என்று பொருள்
உரைத்து,  ‘வாய்மையும் நீதிமுறைமையும் சிறிதும் தவறாத தயரத மன்னன்
வழிவில் வந்த உனக்கு எப்படி முறை தவறிய சீற்றம்விளைத்து’  என்று
கேட்டதாக  உரைப்பதும்  ஒரு பொருள் உண்டு.  இராமனது  பண்பு
நலத்துக்கு அவன்அவ்வாறு  கூறியதாகக்  கேட்டு பொருந்தாமையின்
அவ்வுரைசிறவாதாம்.                                         125

இலக்குவன் கேள்வி  

1731.நீண்டான் அது உரைத்தலும்,
     நித்திலம் தோன்ற நக்கு,
‘ “சேண்தான் தொடர் மாநிலம்
     நின்னது” என்று, உந்தை செப்பப்
பூண்டாய்; “பகையால் இழந்தே,
     வனம் போதி” என்றால்,
யாண்டோ, அடியேற்கு இனிச்சீற்றம்
     அடுப்பது?’ என்றான்.

     நீண்டான் - நெடியோனாய இராமன்; அது உரைத்தலும் - அச்சொற்
கூறுதலும்;  நித்திலம் தோன்ற  நக்கு - (இலக்குவன்) பற்கள் வெளி்த்
தோன்றச்சிரித்து;  ‘சேண்தான் தொடர் மாநிலம் நின்னது’  என்று
உந்தை செப்ப
- நெடுந்தூரம்பற்றியுள்ள அகன்ற பெரிய கோசல அரசு
உன்னுடையது  என்று உன் தந்தை சொல்ல;  பூண்டாய்- சரி என்று
அதனை மேற்கொண்டாய்; பகையால் - பகைவர்களால்;’  இழந்து  வனம்
போதி என்றால்
- அரசை இழந்து  காட்டிற்குச் செல்’ என்று சொன்னால்;
அடியேற்கு- அடியேனுக்கு;  சீற்றம்  அடுப்பது - கோபம்  உண்டாவது;
இனி யாண்டோ’ -இனி எந்த இடத்திலோ;’  என்றான்-