(வசிட்டன்) வில் தடந் தாமரைக் செங்கண் வீரனை - வில் ஏந்திய பெரிய தாமரைமலராகிய சிவந்த கண்களையுடைய இராமனை; உற்று அடைந்து - நெருங்கி வந்து; ‘ஐய!-; நீ ஒருவி - அரண்மனையை விட்டு நீங்கி; ஓங்கிய கல் தடம் காணுதி என்னின் - உயர்ந்த மலை வழியில் செல்லக் காணுவாய் எனில்; கண் அகல் - இட மகன்ற; மல் தடந் தானையான்- வலிமிக்க பெருஞ்சேனையையுடைய தசரதன்; வாழ்கிலான்’- வாழ மாட்டான்; (இறந்துபடுவான்); என்றான் -. 161 இராமன் வசிட்டனுக்கு உரைத்த மறுமொழி | 1767. | ‘அன்னவன் பணி தலை ஏந்தி ஆற்றுதல் என்னது கடன்; அவன் இடரை நீக்குதல் நின்னது கடன்; இது நெறியும்’ என்றனன் - பன்னகப் பாயலின் பள்ளி நீங்கினான். |
பன்னகப் பாயலின் பள்ளி நீங்கினான் - ஆதிசேடனாகிய படுக்கையில் அறிதுயில்செய்தல் நீங்கி அயோத்தி வந்த இராமன் (முனிவனை நோக்கி); ‘அன்னவன் -தயரதனது; பணி தலை ஏந்தி ஆற்றுதல் என்னது கடன் - கட்டளையைச் சிரமேற் கொண்டுசெய்தல் எனது கடமையாகும்; அவன் இடரை நீக்குதல் நின்னது கடன் - அத்தயரதனது துன்பத்தைப் போக்கி ஆற்றுவித்தல் உனது கடமையாகும்; இது நெறியும்’ - இது நீதியும்ஆகும்;’ என்றனன் -. அவதார நோக்கம் கானகம் செல்வது, அதற்காகவே வந்தவன் என்பதை அறிவிக்க, ‘பன்னகப்பாயலின் பள்ளி நீங்கினான்’ என்றார். 162 வசிட்டன் மறுமொழி | 1768. | ‘ “ வெவ் வரம்பை இல் சுரம் விரவு” என்றான் அலன்; தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள்தனக்கு, அவ் அரம் பொருத வேல் அரசன், ஆய்கிலாது, “இவ் வரம் தருவென்” என்று ஏன்றது உண்டு’ என்றான். |
(அது கேட்ட வசிட்டன் இராமனை நோக்கி) ‘வெவ் - கொடிய; வரம்பை இல் - எல்லை இல்லாத; சுரம் - காட்டை; விரவு’ - சேர்வாய்; என்றான்அலன்’ - என்று உன்னைப் பார்த்து அரசன் சொன்னானில்லை; |