பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 279

தெவ்வர் அம்பு அனைய  சொல் தீட்டினாள் தனக்கு - பகைவரது
கணையை ஒத்த கொடிய வார்த்தையை மேலும் கொடுமையாகச் சொன்ன
கைகேயிக்கு;  அவ் அரம் பொருத வேல் அரசன் - அந்த அரத்தால்
அராவிக் கூர்மை செய்யப்பெற்ற வேலை உடைய தசரதன்;ஆய்கிலாது -
ஆராயாமல்;  ‘இவ் வரம் தருவென்’ என்று  ஏன்றது உண்டு - இந்த
வரத்தைத் தருவேன் என்று ஒப்புக்கொண்டது உண்டு அவ்வளவே;
என்றான்-

     தயரதன் உன்னைக் காட்டுக்கு  ஏகும்படி நேராக ஆணையிடவில்லை.
கைகேயிக்கு வரம் தந்தேன் என்று ஒப்புக்கொண்ட அளவேதான்.  ஆகவே,
இதில் அரசனது  ஆணையை மீறல் என்பது  இல்லை என்று இராமனுக்கு
வசிட்டன் கூறினான்.  வரம்பை;  வரம்பு;  ஐகாரம் சாரியை.           163

இராமன் தந்த விளக்கம்  

1769.‘ஏன்றனன் எந்தை இவ் வரங்கள்; ஏவினாள்
ஈன்றவள்; யான் அது சென்னி ஏந்தினேன்;
சான்று என நின்ற நீ தடுத்தியோ?’ என்றான் -
தோன்றி நல் அறம் நிறுத்தத் தோன்றினான்.

     தோன்றிய நல் அறம் நிறுத்தத் தோன்றினான் - விளங்கிய நல்ல
தருமத்தை உலகில் நன்கு நிலைபெறுத்த அவதாரம் செய்த இராமன்
(வசிட்டனை நோக்கி);  ‘எந்தை
- என் தந்தையாகிய தசரதன்;
இவ்வரங்கள் - இந்த இரண்டு வரங்களையும்;  ஏன்றனன் - தருவதாக -
தந்ததாக ஒப்புக்கொண்டான்;  ஈன்றவள் - என் தாய்;  ஏவினாள் -
ஆணை இட்டாள்;  அது - அந்த உத்தரவை;  யான் -;  சென்னி
ஏந்தினேன்
- தலைமேல் தாங்கினேன்;  சான்று  என நின்ற நீ -
இவற்றுக் கெல்லாம் சாட்சியாக இருந்த நீ;  தடுத்தியோ? - இதனை
விலக்குகிறாயோ?’ என்றான் -.

     வரம் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட பிறகு அரசன் ‘என்னை நேராகக்
காட்டுக்குச் செல்’ என்று பார்த்துச் சொல்லவில்லை; ஆதலின், காடு
செல்வது அரசன் ஆணையன்று என்று வாதிடுவது பொருந்துமா?’
என்கிறான் இராமன். ‘சகல சாத்திரங்களும் அறிந்தவனாகிய நீ இப்படிச்
சொல்லலாமா’ என்பான் ‘சான்று என நின்ற நீ’ என்றான் என்பதும்
ஆம்.                                                       164

இராமன் புறப்பாடு  

1770.என்றபின், முனிவன் ஒன்று இயம்ப நேர்ந்திலன்;
நின்றனன், நெடுங் கணீர் நிலத்து நீர்த்து உக;
குன்றன தோளவன் தொழுது, கொற்றவன்
பொன் திணி நெடு மதில் வாயில் போயினான்.