என்றபின்- இராமன் இவ்வாறு கூறிய பிறகு; முனிவன் - வசிட்டன்; ஒன்று இயம்ப நேர்ந்திலன் - ஒரு வார்த்தையும் சொல்ல இயலாது; நெடுங்கண் நீர்நிலத்து நீர்த்து உக - நீண்ட தன் கண் நீரானது நிலத்தில் ஈரம் செய்து சிந்த; நின்றனன்-; குன்றன தோளவன் - மலை போன்ற தோள்களை உடைய இராமன்; தொழுது- (முனிவனை) வணங்கி; கொற்றவன் பொன் திணி நெடுமதில் வாயில் - அரசனது பொன்னாற செய்யப் பெற்ற அரண்மனை மதிலின் வாயிலில்; போயினான் - போய்ச் சேர்ந்தான். குன்றன தோளவனைப் தொழுது கொற்றவனாய இராமன் நெடுமதில் வாயில் போயினான் என்பதும் ஓர் உரை ஆயினும், வசிட்டனைக் ‘குன்றன தோளவன்’ எனல்ஏற்புடைத்தாகாமையின் அவ்வுரை பொருந்தாமை அறிக. நீர்த்து - நீரின் தன்மை. செய்து அதாவதுஈரம் செய்து என்பதாகும். 165 மக்கள் துயரம் | 1771. | சுற்றிய சீரையன், தொடரும் தம்பியன்., முற்றிய உவகையன், முளரிப் போதினும் குற்றம் இல் முகத்தினன், கொள்கை கண்டவர் உற்றதை ஒருவகை உணர்த்துவாம் அரோ. |
சுற்றிய சீரையன் - இடையில் கட்டிய மரவுரி உடையனாய்; தொடரும் தம்பியன் - தன்னைப் பின்பற்றிவரும் தம்பியோடு; முற்றிய உவகையன் - நிரம்பியமகிழ்ச்சியுடன்; முளரிப் போதினும் - தாமரை மலரைவிட; குற்றம் இல்முகத்தினன் - குற்றமற்ற முகமலர்ச்சி கொண்டு செல்கின்ற இராமனின்; கொள்கை- மனக் கருத்தை; கண்டவர் - அறிந்த அந்நகர மக்கள்; உற்றதை - அடைந்ததுன்பத்தை; ஒருவகை - ஓரளவுக்கு; உணர்த்துவாம் - சொல்லுவோம். கான் புகும் இராமனது முகமலர்ச்சி தாமரை மலரினும்பொலிந்தது என்பதால் அவனது மனத்தின் சமநிலை அறியலாறிற்று. ‘அரோ’ ஈற்றசை. 166 | 1772. | ஐயனைக் காண்டலும், அணங்கு அனார்கள்தாம், மொய் இளந் தளிர்களால் முளரிமேல் விழும் மையலின் மதுகரம் கடியுமாறு என, கைகளின் மதர் நெடுங் கண்கள் எற்றினார். |
அணங்கு அனார்கள் தாம் - தெய்வ மகளிரை ஒத்த அயோத்தி நகர மகளிர்; ஐயனைக் காண்டலும் - (வனம் புகும் மரவுரி அணிந்த) இராமனைக் கண்டவுடன்; மொய்இளந்தளிர்களால் - நெருங்கி இளமையான தளிர்களைக் கொண்டு; முளரிமேல் விழும் -தாமரை |