பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 281

மலர்மேல் வந்து விழுகின்ற; மையலின் - கள்ளுண்ட மயக்கமுடைய;
மதுகரம் - வண்டுகளை; கடியுமாறு என - ஒட்டும் தன்மை போல;
கைகளின்
- தம் கைகளால்; மதல்நெடுங்கண்கள் - செருக்கிய நீண்ட
கண்களை; எற்றினார் - மோதினார்கள்.

     தளிர்கள் -கைகள், தாமரை - முகம். வண்டு - கண்கள்,.ஓட்டுதல் -
கை களால் மோதுதல் என உவமை காண்க. முடிசூட வேண்டிய அரச
மகன்மரவுரி தரித்தகோலம் அவர்கள் கண்களாற் பார்க்கப் பொறுக்க
முடியவில்லை; ஆதலின் இப்படிச் செய்தனர்.                       167

1773.தம்மையும் உணர்ந்திலர் - தணிப்பு இல் அன்பினால்
அம்மையின் இரு வினை அகற்றவோ? அன்றேல்,
விம்மிய பேர் உயிர் மீண்டிலாமைகொல்?-
செம்மல்தன் தாதையின் சிலவர் முந்தினார்.

     சிலவர்த - சிலர்; தணிப்பு இல் அன்பினால் - அடக்க முடியாத
அன்பால்;தம்மையும் உணர்ந்திலர் - தம் நிலையையும் அறியாதவர் கள்
ஆயினராய்; செம்மல்தன் தாதையின் - இராமபிரானது தந்தையாகிய
அயரதனைவிட ; முந்தினார் -முற்பட்டு இறந்து விண் சென்றனர்;
அம்மையின் - வருகின்ற பிறப்பில்; இருவினைஅறுக்கவோ? -
இருவினைகளையும் இல்லாமல் நீக்கிக்கொள்ளவா; அன்றேல் - அப்படி
இல்லாமற்போனால்; விம்மிய பேர் உயிர் மீண்டிலாமை கொல் -
பிரிவினால் துடித்தஅரிய உயிர் வெளிப் போனது திரும்ப மீளாமையாலோ.

     சென்ற உயிர் இனித் திரும்பாமல் மீளா உலகம் சேர்ந்ததுஆகலின்,
‘இரு வினை அகற்றவோ’ என்றார். இருவினை அற்றவர் மீளா உலகம்
சேர்வர்ஆதலின்.                                            168

1774.விழுந்தனர் சிலர்; சிலர் விம்மி விம்மி மேல்
எழுந்தனர்; சிலர் முகத்து இழி கண்ணீரிடை
அழுந்தினர்; சிலர் பதைத்து, அளகவல்லியின்
கொழுந்து எரி உற்றென, துயரம் கூர்கின்றார்.

     சிலர் விழுந்தனர் -; சிலர் மேல் விம்மி விம்மி எழுந்தனர் -
சிலர் மேலும்மேலும் அழுதழுது எழுந்தார்கள்; சிலர் -; முகத்து இழி
கண்ணீரிடை அழுந்தினர்
-முகத்திலிருந்து இறங்குகின்ற கண்ணீரினிடத்து
அழுந்திப் போனார்கள்; சிலர்-; பதைத்து- துடித்து; அனகவல்லியின் -
மயிர்க் கொடியின்; கொழுந்து எரி உற்றென - நுனிதீப்பற்றியது போல;
துயரம் கூர்கின்றார் - துன்பம் மிகுகின்றார்.