பக்கம் எண் :

282அயோத்தியா காண்டம்

     அனகம்  என்று பாடங்கொண்டு நீர் எனப் பொரு படுமாதலின்
தண்ணீரில்  உள்ள கொடியின் கொழுந்து  தீப்பற்றியது  போல என
உரைப்பினும்அமையும்.                                        169

1775. கரும்பு அன மொழியினர், கண் பனிக்கிலர்,-
வரம்பு அறு துயரினால் மயங்கியேகொலாம்.
இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர்!-
பெரும் பொருள் இழந்தவர் போலும் பெற்றியார்.

     கரும்பு அன மொழியினர் - கரும்பு போன்ற பேச்சினை உடைய
மகளிர்; கண்பனிக்கிலர் - கண்ணீர் அரும்பாதவராய்; பெரும் பொருள்
இழந்தவர் போலும்பெற்றியர்
- பெரிய செல்வத்தை இழந்து
விட்டவர்களது  தன்மையை  உடையவராகி;  இரும்புஅளமனத்தினர்
என்ன நின்றனர்
- இரும்பை ஒத்த மனம் உடையவர் என்று கண்டோர்
சொல்லும்படி நின்றார்கள்; வரம்பு அறு துயரினால் மயங்கியே கொல் -
(இவ்வாறுஆனது) அளவற்ற துன்பத்தால் திகைத்ததாலோ?

     பெருந்துன்பத்தில் மனம் இறுகிப் போதல் உலகியல்;  அவ்வாறு
ஒருசிலர் இருந்தனர், ‘ஆம்’ அசை.                               170

1776.நெக்கன உடல்; உயிர் நிலையில் நின்றில;
‘இக் கணம்! இக் கணம்!’ என்னும் தன்மையும்
புக்கன; புறத்தன; புண்ணின் கண் மலர்
உக்கன, நீர் வறந்து, உதிர வாரியே!

     உடல் நெக்கன - (சிலர்) உடல்கள் உடைந்தன;  உயிர் நிலையில்
நின்றில
- உயிர் இருப்பில் நிலையாக இல்லாமல் போயின;  இக்கணம்!
இக்கணம்!  என்னும்தன்மையும் புக்கன,  புறந்தன
- இந்தக் கணம்
போய்விடும் என்னும் தன்மையும் உடையவாய்உயிர்கள் உள்ளே
நுழைந்தன, வெளியே போயின; கண் மலர் - மலர்க்கண்கள்; நீர்வறந்து-
நீர்வற்றி;  புண்ணின் - புண்ணைப் போல;  உதிர வாரி -இரத்தப்
பெருக்கை;  உக்கன - சிந்தின.

     உடல் நெக்குவிட்டு உயிர் இதோ போய்விடும் என்கின்ற நிலையில்
உடலினுள் நுழைவதும்போவதுமாய் ஒரு நிலையில் நில்லாமல் இருந்தது
என்பதாம். கண்கள் குருதி சிந்தின புண்ணைப்போல், ‘ஏ’ ஈற்றசை.     171

1777.இரு கையின் கரி நிகர் எண் இறந்தவர்,
பெருளகு ஐயில் பெயர்த்தனர், தலையைப் பேணவர்.
ஒரு கையில் கொண்டனர், உருட்டுகின்றனர்;
கரிகையின் கண் மலர் சூன்று நீக்கினார்.

     இரு கையின் கரி நிகர் எண் இறந்தவர் - இரண்டு கைகளை