பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 283

உடைய யானையை ஒத்த கணக்கற்ற வீரர்கள்; பெருகு ஐயில் - பெரிய
கைவாளினால்; தலையைப் பேணலர் - தலையை விரும்பாதவர்களாய்;
பெயர்த்தனர் - பேர்த்து எடுத்து;  ஒரு கையில் கொண்டனர் - ஒரு
கையில் வைத்துக் கொண்டு;  உருட்டுகின்றனர் - உருள விடுகின்றார்
(வேறுசிலர்); சுரிகையின் -குற்றுடைவாளால்;  கண் மலர் ?-  மலராகிய
கண்ணை; துன்று - குடைந்து;  நீக்கினார் - போக்கினார்.

     ஆடல் வீரர்க்கு ‘இரு கையின் கரி’ என உவமை கூறினார். ‘இருகை
வேழத்து இராகவன்’ என்பது பாலகாண்டத்தொடர். மகளிர் செயல் கூறியவர்,
இதனால் ஆடவ வீரர்செயலைக் கூறினார். ஐயில்; அயில்-முதற்போலி.  172

1778.சிந்தின அணி; மணி சிதறி வீழ்ந்தன;
பைந் துணர் மாலையின் பரிந்த, மேகலை;
நந்தினர், நகை ஒளி விளக்கம்; நங்கைமார்
சுந்தர வதனமும், மதிக்குத் தோற்றவே.

     நங்கைமார் - மகளிரின்;  அணி சிந்தின - ஆபரணங்கள் எங்கும்
சிதறின;  மணி சிதறி வீழ்ந்தன - அவற்றில் பொதிதந்த மணிகள் எங்கும்
உதிர்ந்து விழுந்தன; மேகலை - அவர் இடையில் அணிந்த மேகலாபரணம்;
பைந்துணர் மாலையின்பரிந்த - பசிய பூங்கொத்தால் ஆகிய மாலை
அறுந்து  விழுவது போல அறுந்து  விழுந்தன; நகைஒளி விளக்கம் -
புன்சிரிப்பாகிய முக ஒளி மலர்ச்சி; நந்தின- கெட்டன; சுந்தர வதனமும் -
அவர்கள் அழகிய முகமும்; மதிக்குத் தோற்ற - நிலவுக்குத்தோற்றன.

     முன்பு மதியை வென்ற முகம் இப்போது துக்கத்தால்பொலிவிழத்தலின்
மதிக்குத் தோற்றது என்றவாறாம். ‘ஏ’ காரம் ஈற்றசை.                173

அரசன் தேவியர் துயரம்  

1779.அறுபதினாயிரர் அரசன் தேவியர்,
மறு அறு கற்பினர், மழைக் கண்ணீரினர்,
சிறுவனைத் தொடர்ந்தனர்; திறந்த வாயினர்;
எறி திரைக் கடல் என இரங்கி ஏங்கினார்.

     மறு அறு கற்பினர் - குற்றமற்ற கற்பினை உடைய; அறுபதினாயிரர்
அரசன்தேவியர்
- அறுபதினாயிரம் பேராகிய தசரதனுடைய மனைவியர்;
மழைக் கண் நீரினர் - மழை போன்ற கண்ணீரை  உடையவராய்; 
சிறுவனைத் தொடர்ந்தனர் - இராமனைப் பின்தொடர்ந்து;  திறந்த
வாயினர்
- வாய் திறந்து;  எறி திரைக்கடல் என இரங்கிஏங்கினார் -
அலை வீசும் கடல் போல அழுது  வருந்தினார்கள்.