இவர் உரிமை மகளிர் ஆவர். பரசுராமனிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள ஒவ்வொருஆண்டும் மணக் கோலத்துடன் இருக்க வேண்டிய; தயரதன் அறுபதினாயிரம் மகளிரை அறுபதினாயிரம் ஆண்டுகளில் மணந்தான் என்று ஒரு கதை உண்டு. இதுவே வான்மீகத்தில் முந்நூற்றைம்பதின்மர் எனப்பேசப்பெற்றுள்ளது. மூவரே பட்டத்தரசியர் ஆவர். 174 | 1780. | கன்னி நல் மயில்களும், குயில் கணங்களும், அன்னமும், சிறை இழந்து அவனி சேர்ந்தன என்ன, வீழ்ந்து உழந்தனர் - இராமன் அல்லது, மன் உயிர்ப் புதல்வரை மற்றும் பெற்றிலார். |
இராமன் அல்லது - இராமனை அல்லாமல்; மற்றும் - வேறு; மன் உயிர்ப் புதல்வரைப் பெற்றிலார் - நிலைபெற்ற உயிராக உள்ள புத்திரர்களைப்பெறாதவர்களாகிய அத்தேவியர்; கன்னி நல்மயில்களும் - இளமையான நல்ல மயில்களும்; குயில் கணங்களும்- குயிற் கூட்டங்களும்; அன்னமும் - அன்னப் பறவைகளும்; சிறை இழந்து -இறக்கைகளை இழந்து; அவனி சேர்ந்தன என்ன - பூமியை அடைந்தவை போல; வீழ்ந்து உழந்தனர் .- தரையில் விழுந்து வருந்தினார்கள். பறவைகளுக்குச் சிறகுகள் வாழ்வின் ஆதாரம். அதை இழந்த பிறகு அவை வாழ இயலா. அதுபோலவே இராமனே இவர்கள் அனைவர்க்கும் உயிராவான். இராமனை இழந்து உயிர் வாழஇயலாதவராக ஆயினர். 175 | 1781. | கிளையினும், நரம்பினும், நிரம்பும் கேழன, அளவு இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால், தொளை படு குழலினோடு, யாழ்க்குத் தோற்றன - இளையவர் அழுதினும் இனிய சொற்களே. |
இளையவர் அமுதினும் இனிய சொற்கள்- இளைய அத்தேவியரின் அமுதத்தைக் காட்டிலும்இனிமையான சொற்கள்; அளவு இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால் -அளவில்லாமல் பெருமூச்சு விட்டு அழுகின்ற காரணத்தால்; கிளையினும் நரம்பினும் நிரம்பும்கேழன - மூங்கிலாலும், நரம்பாலும் செய்யப் பெற்றனவாகிய; தொளைபடு குழலினோடுயாழ்க்குத் தோற்றன - உள்தொளை உடைய புல்லாங்குழலோடு யாழிசைக்குத் தற்போது தோற்றுப்போயின. கிளை - மூங்கில். ஆகுபெயராய்ப் புல்லாங்குழலின் இசையைக் குறித்தது. நரம்பும்அவ்வாறே யாழிசையைக் குறித்தது. கேழன - சுவை உடையன முன்பு அம்மகளிர் குரல் ஒலி குழலையும்யாழையும் வென்றது. இப்போது அமுது அரற்றிய காரணத்தால் தோற்றது என்பதாம். 176 | 1782. | ‘புகழ் இடம், கொடு வனம் போலும், என்று, தம் மகன்வயின் இரங்குறும் மகளிர் வாய்களால், |
|