| | அகல் மதில் நெடு மனை, அரத்த ஆம்பல்கள் பகலிடை மலர்ந்தது ஓர் பழனம் போன்றவே. |
‘புகல் இடம் கொடு வனம் போலும் என்று’- இராமனுக்கு இனித் தங்கும் இடம்கொடிய வனம் என்று சொல்லி; தம் மகன் வயின் - தம்முடைய மகனாகிய இராமனிடம்; இரங்குறும் - அவலிக்கின்ற; மகளிர் வாய்களால் - அத்தேவியரது அமுது மேலும்சிவந்த வாய்களால்; அகல் மதில் நெடு மனை - அகன்ற மதிலை உடைய பெரிய அரண்மனை; அரத்த ஆம்பல்கள் - செவ்வாம்பற் பூக்கள்; பகலிடை - பகற்காலத்தில்; மலர்ந்தது - மலர்ந்துள்ளதான; ஓர் பழனம் போன்ற - ஒரு வயலைப் போன்று ஆயின. வாய்க்கு ஆம்பல் உவமை. அழுதலால் மேலும் சிவந்த வாய் செவ்வாம்பல் மலர்ந்தாற் போலும், பல்லாயிரம் தேவியர் அழுதலால் பல செவ்வாம்பல்கள்பகலில் மலர்ந்த வயல் போன்றாயிற்று அரண்மனை என்றார். ‘ஏ’ காரம் ஈற்றசை. 177 | 1783. | திடருடைக் குங்குமச் சேறும், சாந்தமும் இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன; மிடை முலைக் குவடு ஓரீஇ, மேகலைத் தடங் கடலிடைப் புகுந்த, கண் கலுழி ஆறு அரோ., |
கண் கலுழி ஆறு - (அம் மகளிரது) கண்ணீர்ப் பெருக்காகிய கலங்கிய ஆற்றுவெள்ளம்; திடர் உடைக் குங்குமச் சேறும், சாந்தமும் இடை இடை வண்டல் இட்டு -திட்டுத் திட்டாகப் பொருந்திய (மார்பகத்தில் பூசப்பெற்ற) குங்குமச் சேறும் செஞ்சாந்தமும்ஆகியவற்றை நடுநடுவே சேற்றுக் குழம்பாகக் கொண்டு; ஆரம் ஈர்த்தன - (அவர்கள் மார்பில் அணிந்துள்ள) முத்துமாலையை இழத்துக்கொண்டு; மிடைமுலைக் குவடு ஒரீஇ -நெருங்கியுள்ள முலைச் சிகரங்களிலிருந்து கீழ் இறங்கி; மேகலைத் தடங் கடலிடைப் புகுந்த- மேகலையாகிய அகன்ற கடலுக்குள் நுழைந்து பாய்ந்தன. கலுழி - கலங்கிய நீர் ஆரம் - ஆற்றை நோக்கின்சந்தனமாம். மகளிரை நோக்க முத்தாரமாம். இங்கு முத்துவடம் சிலேடையாக அமைந்தது. மற்றவைஉருவகம். 178 | 1784. | தண்டலைக் கோசலத் தலைவன் மாதரைக் கண்டனன் இரவியும், கமல வாள் முகம் - விண் தலத்து உறையும் நல் வேந்தற்கு ஆயினும், உண்டு இடர் உற்ற போது என் உறாதன? |
தண்டலைக் கோசலத் தலைவன் மாதரை- சோலை சூழ்ந்த |