பக்கம் எண் :

286அயோத்தியா காண்டம்

கோசல நாட்டுக்குத் தலைவனாய தயரதன் தேவியரை; இரவியும் -
சூரியனும் (இப்போது); கமல வாள்முகம் கண்டனன் - தாமரை மலர்
போன்ற ஒளியுடைய முகத்தை (இது காறும்   ஒருபொழுதும் காணாதவன்)
கண்டான்;  விண் தலத்து  உறையும் நல்வேந்தற்கு ஆயினும் -
விண்ணின் கண் தங்கியுள்ள தேவ அரசனுக்கு ஆனாலும்;  இடர்
உற்றபோது
- துன்பம் வந்தபோது; உறாதன என் உண்டு? - எவைதாம்
வராதவை  உண்டு.

     வேற்றுப்பொருள் வைப்பணி. துன்பத்தில் இருப்பவர்களுக்கு எல்லா
அவமானமும் வந்து சேரும் என்பது  உலகியல்; அரண்மனையை  விட்டு
வெளியே வராதவர் ஆதலின்இதுகாறும் சூரியனால்  பார்க்கப்படாதது
அவர் முகம் என்றானாம்.                                      179

1785.தாயரும், கிளைஞரும், சார்ந்துளார்களும்,
சேயரும், அணியரும், சிறந்த மாதரும்,
காய் எரி உற்றனர் அனைய கவ்வையர்;
வாயிலும் முன்றிலும் மறைய மொய்த்தனர்.

     தாயரும் - தாய்மார்களும்;  கிளைஞரும் - உறவினர்களும்;
சார்ந்துளார்களும் - சார்ந்து பற்றுக்கோடாய் எண்ணித்
தங்கியுள்ளவர்களும்; சேயரும்அணியரும்- சேய்மையிலும் அண்மையிலும்
உள்ளாரும்;  சிறந்த மாதரும் - அழகிற்சிறந்த மகளிரும்;  காய் எரி
உற்றனர் அனைய
- சீறும் நெருப்பில் விழுந்தாற்போன்ற;  கவ்வையர் -
துன்பமுற்று;  வாயிலும்  முன்றிலும் மறைய - அரண்மனைவாயிலும்
முற்றமும்  மறையும்படி;  மொய்த்தனர் - நெருங்கினார்கள்.

    கவ்வை - அரற்றுதலுக்கு  ஏதுவாகிய பெருந்துன்பம்.           180

இராமன் தன் மனையை அடைதல்  

1786.இரைத்தனர், இரைத்து
     எழுந்து ஏங்கி, எங்கணும்,
திரைப் பெருங் கடல் எனத்
     தொடர்ந்து பின் செல,
உரைப்பதை உணர்கிலன்,
     ஒழிப்பது ஒர்கிலன்,
வரைப் புயத்து அண்ணல் தன்
     மனையை நோக்கினான்.

     (அனைவரும் ) இரைத்தனர் - அழுதனர்;  இரைத்து  எழுந்து
ஏங்கி
- அமுது மெல்ல எழுந்து  புலம்பி;  எங்கணும் - எவ்விடத்தும்;